பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 29? தானியம் அனைத்தையும் அரசுக்குக் கொடுத்து விடவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்தக் கொள்முதல் முறையில், கீழ்மட்ட அதிகாரிகளின் ஊழல் வளர்ந்தது! உபரி தானியம், பண்ணை விவசாயிகளிடம் எவ்வளவு உள்ளது என்ற மதிப்பீட்டில், பெரிய விவசாயிகளிடத்தில் அளவைக் குறைத்து, மதிப்பிட்டனர் அதிகாரிகள் உபரி தானியங்களை ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்காமல், வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்று விற்கப் பெரிய பண்ணைக்காரர்கள் முயன்றார்கள். அவ்வாறு வெளியே எடுத்துச்செல்வது குற்றமென்று, அதற்கான அனுமதியை வழங்கிட அரசு மறுத்தது! உணவு தானியங்களை நாம் பாடுபட்டு உற்பத்தி செய்கின்றோம்! நம்மைத் திருடர்கள் போல் நடத்துகின்றதே அரசாங்கம்! என்ற எரிச்சலும் பண்ணை விவசாயிகளுக்குள் உருவாயிற்று! ஒமந்துார் இராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தபோது, மத்திய அரசு செய்கின்ற இப்படிப் பட்ட கொள்முதல் ஏற்பாட்டையும், உணவுப் பங்கீட்டு முறையையும் அவர் கடுமையாகவே எதிர்த்தார்! காரணம், அவர் விவசாயி கிராம மணியம் புரிந்தவர் அவருக்குப் பிறகு பிரதமராக வந்த பி.எஸ். குமாரசாமி ராஜா இந்த விவகாரத்தில் தாம் எதுவும் செய்யமுடியாது; இது மத்திய அரசின் ஏற்பாடு” என்று வாளாவிருந்து விட்டார்: ஆட்சி புரியும் ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கட்சி அரசுக்கும் இந்தச் செயல்கள் பெரிய தலைவலிப் பிரச்னைகளாகி விட்டன! ஆனால் எதிர்க்கட்சிகள், விவசாயிகள் குறைகளைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டதால், அடுத்து வரும் 1952-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா? என்ற சந்தேக நிலை பரவலாகவே அனைவரிடமும் உருவாகலாயிற்று! உணவுப் பங்கீட்டுக் கடைகளில் ரேஷன் வாங்கிவந்த பொதுமக்களிடையே, உணவுப் பற்றாக்குறைகள் பெரிய நெருக்கடிகளையும், மனக் குறைகளையும் உண்டாக்கின! அதனால், வெளியே உள்ள பொதுக் கடைகளில் உணவுப் பொருட்களைப் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் கட்டாய நிலை உருவாயிற்று!