பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தேசியத் தலைவர் காமராஜர் திருமணம், வேறுபல வெவ்வேறு விழாநிகழ்ச்சிகள், எதனையும் மக்கள் விரும்பியவாறு - மனமார நடத்த முடியாமல், எத்தனை பேரை விருந்தினராக ஏற்பது என்ற விருந்துக் கட்டுபாட்டையும் கொண்டு வந்தது தமிழ்நாட்டு அரசு! அரசாங்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தும் அதிகாரிகள், ஆங்காங்கே ஆளுக்கேற்றவிதமாக, பாரபட்சமான முறைகளிலே நடந்துகொண்டு, அவர்கள் ஊழலை ஏற்படுத்தினார்கள் பொதுமக்கள் விரோதச் செயல்! இந்தப் பொதுமக்கள் விரோதச் செயல்களால், 1952-ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமா? என்ற ஐயப்பாடு நிலவியது. அப்போதைய சென்னை மாகாணம் என்று கூறப்பட்ட மாநிலப் பகுதி தமிழ்நாடு, ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களும், கேரளத்தில் மலபார் மாவட்டமும், கர்நாடகத்தின் பெல்லாரி, தெற்குக் கன்னட மாவட்டங்களும் அடங்கியதாக இருந்தது. அதனால், அந்தந்த மாவட்டங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு ஓங்கி வளர்ந்து வந்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு நேர் சரியான பலமுள்ள கட்சியாகப் பொதுவுடைமைக் கட்சி வளர்ந்திருந்தது! இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியிலே பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கி விட்டது என்ற காரணத்தையும், அதற்கான வேறு சில காரணங்களையும் கூறித் தந்தை பெரியார் இராமசாமி அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டுப் பிரிந்து போய், நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்று உருமாறி மாறி, இறுதியிலே திராவிடர் கழகமாகிப் பெரும் செல்வாக்குடன் நடமாடினார்: 'பெரியார் அவர்கள், மக்களுக்குத் தான் கூறிய கொள்கைக்கேற்ப நடவாமல் எதிர்விரோதமாக நடந்தார் என்ற தத்துவப் போராட்டத்தை எழுப்பி, அதற்கு மணியம்மையார் திருமணத்தைக் காரணம் காட்டி, திராவிடர் கழகத்திலே இருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் 1949-ஆம் ஆண்டு புதிய கழகம் தோன்றியது. அது காங்கிரஸ் கட்சிக்கு ஈடுகொடுக்கும் பலமுள்ள நிலையில் வேகமாக வளர்ந்து வந்தது!