பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 293 காங்கிரஸ் கட்சியை விட்டுப் பிரிந்து போன பிற எல்லாக் கட்சிகளும் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து, உணவுப் பற்றாக்குறைகள் போன்ற பல ஆட்சிப் பலவீனங்களைச் சுட்டிக் காட்டி வளர்ந்து கொண்டே வந்தன! இத்தனைக்கட்சிகளுக்கு இடையேயும், காங்கிரஸ்கட்சிக்குள்ளே வளர்ந்து விட்ட அணிகளின் உட்கட்சிப் பகையையும் எதிர்த்து, தலைவர்காமராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்பாட்டோடு காப்பாற்றி வரும் கடமையுணர்வுப் பொறுப்போடு இருந்து வந்தார் 1952-ஆம் ஆண்டில், இந்திய புதிய அரசியல் சட்டத்திற்கேற்ப நாடெங்கும் முதல் பொதுத்தேர்தல் வந்தது 21வயது அடைந்த ஆண் - பெண் அனைவரும் வாக்களிக்கும் உரிமையை இந்தத் தேர்தல் பெற்றது! 1952- தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா? இந்த நிலையில், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றிபெறுமா? என்ற சந்தேகம் தலைவர் காமராஜ் அவர்களுக்கும் ஏற்பட்டது! காங்கிரஸ் கட்சியிலே எந்த வேலையும் செய்யாமல், மனவெறுப்போடு ஒதுங்கியிருந்தவர்களை எல்லாம் ஒற்றுமைப் படுத்தி, ஓரணியில் சேர்த்திடதலைவர்காமராஜ் முயன்றார்: தினமணி டி.எஸ். சொக்கலிங்கம், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில், திருவாளர்கள் இராமகிருஷ்ண ஐயர், வி.சி. பழநிசாமிக்கவுண்டர், மதுரை சிதம்பர பாரதி, சுதர்சனம் நாயுடு, சங்கிலியா பிள்ளை, அண்ணாமலைப் பிள்ளை, உடையப்பாபோன்ற பலரைஅக்கூட்டத்திலே பேசவைத்து அவர்களின் கருத்துகளில் உள்ளகாரண காரியங்களை அறிந்தார் நம் காமராஜர். காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமையை உருவாக்கிட, தலைவர் காமராஜ் அவர்களும் ஓமந்துர் இராமசாமி ரெட்டியார் அவர்களும் சந்தித்து மனம் விட்டுப் பேசிக் கலந்துரையாடவேண்டும் என்று அந்தக்கூட்டத்தில் முக்கிய காங்கிரஸ்காரர்கள்தீர்மானம் செய்தார்கள். ஓமந்துராரும் காமராஜரும் சந்திப்பு அதற்கேற்ப, டி.எஸ். சொக்கலிங்கமும் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரும், தலைவர்காமராஜைச்சந்தித்துப் பேசினார்கள்: