பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94. தேசியத் தலைவர் காமராஜர் 'நான் எதற்கும் தயார். கட்சியில் ஒற்றுமை நீடிக்க நான்குறுக்கே நிற்பேனா?” என்று தலைவர்காமராஜ் கேட்டார்: 'ரெட்டியாரிடம் கூறுங்கள். தமிழ் நாடு ஆட்சி மன்றக் குழுவில் பாதி இடங்களை அவருக்குக் கொடுக்கத் தயார் அவரைப் போய் சமாதானப்படுத்தி அழைத்து வாருங்கள்' என்று தலைவர் காமராஜ் கூறினார். அந்தக் குழு, ஓமந்துராரிடம் சென்றது. அதற்கு அவர் இரண்டு நிபந்தனைகளை விதித்தார். 'நாட்டில் பல ஆண்டுகளாக மழை இல்லை! பஞ்சத்தால் மக்கள் வாடுகிறார்கள். எங்கு பாதிக்கப்பட்ட மக்கள் கஷ்டப்படுகிறார்களோ - அங்கு, உடனடியாக அரசு கஞ்சித் தொட்டிகளைத் திறக்க வேண்டும்' 'வறண்டு தீய்ந்து போன நிலங்களுக்கு நிலவரியை வசூலிக்காமல் நிறுத்த வேண்டும்’ என்று ரெட்டியார் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமைக்காகவும், தேர்தலில் கட்சி வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும், மேற்கண்ட இரண்டு நிபந்தனைகளை அவர் விதித்தார்: இந்த இரண்டு நிபந்தனைகளையும் திரு.பி. எஸ். குமாரசாமி ராஜாவினுடைய அரசுதான் செய்ய வேண்டும் அவர் அலட்சியமாக அதை விட்டுவிட்டார். அதனால், ஓமந்தூர்ரெட்டியார் ஒத்துழைப்பு காங்கிரஸ் கட்சிக்கு இல்லாமல் போய்விட்டது. முதல் பொதுத் தேர்தல்! 1952-ஆம் ஆண்டு தேர்தலும் வந்தது. அதற்குக் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். முதல் பொதுத் தேர்தல் அல்லவா? தேர்தல் பொதுக் கூட்டங்கள், விதிப் பிரசாரங்கள், நுகத்தடி பூட்டப்பட்ட இரட்டைக் காளைச் சுவரொட்டிகள், காந்தியடிகள், பிரதமர்நேருபோன்ற தலைவர்களது திருஉருவப்படங்கள் அச்சடித்த சுவரொட்டிகள், ஊர்வலங்கள், காங்கிரஸ்ஆட்சி அன்று வரைஆற்றிய சாதனைப் பட்டியல்கள் கொண்ட துண்டறிக்கைகள், இவற்றோடு காங்கிரஸ் ஊழியர்களின் கண்ணயராப் பணிகள் எல்லாம் நடந்து முடிந்த பின்பு, வாக்குப் பதிவுகள் எல்லாத் தொகுதிகளிலும் முடிந்தன! அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில், 1949-ஆம் ஆண்டுதுவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மிக வேகமாக