பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 295 வளர்ந்து வந்திருந்தாலும், அதற்கு இது முதல் தேர்தல் என்பதாலே, அந்தத் தேர்தலில் அக்கட்சி நேரிடையாகத் தேர்தல் போட்டியில் கலந்து கொள்ளவில்லை; அதன்வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக நிறுத்தவுமில்லை. ஆனால், சென்னை சட்டப் பேரவையிலும், டில்லி நாடாளுமன்றத்திலும் திராவிடநாடு பிரிவினைபற்றிய பிரச்னைகள் வந்தால், யார் யார் அதை ஆதரிக்கிறோம் என்று தி.மு.கழக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுகிறார்களோ, அவர்களை ஆதரிப்போம் என்று தி.மு.கழகம் தனது மாநாட்டிலே தீர்மானம் ஒன்று போட்டது! அதன்படியே அந்தக் கட்சி நடந்து கொண்டது தோல்வி! முதல் தேர்தலில் தோல்வி! அந்த ஒப்பந்தத்தை ஏற்று, கடலூர் எஸ். எஸ். இராமசாமி படையாட்சி, எம்.ஏ மாணிக்கவேலு, திருத்தணி விநாயகம் போன்ற ஏறக்குறைய நூறுபேர்கள் திராவிட நாடு பிரிவினை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். அவ்வாறு கையொப்பமிட்டவர்களையும், அவர்களது உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி போன்ற பிற கட்சிகளையும், சுயேச்சைகளையும் கூட்டணி பெயரால் தி.மு.கழகம் ஒன்று சேர்த்து ஆதரித்து, பலமான தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், வாக்குகள் சேகரிப்புப் பணிகள் வாயிலாகக்காங்கிரஸ்கட்சியை முழு மூச்சாகத் தேர்தலில் எதிர்த்தது! தேர்தல் முடிந்தது! வாக்குகள் ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணப்பட்டன! பிரதமர் பி.எஸ். குமாரசாமி ராஜா தோற்றார்: அமைச்சர் பக்தவத்சலம் தோற்றார். பி. கோபால ரெட்டியார் ஆந்திராவிலே தோற்றார் என். சஞ்சீவ ரெட்டியும் தோற்றார்: இவ்வாறு காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும் தோற்றார் தோற்றார் என்ற முடிவுகளே தொடர்ந்தன! திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரித்த வன்னியர் கட்சித் தலைவர் எஸ். எஸ். இராமசாமி படையாட்சி, காமன்வீல் கட்சி எம்.ஏ.மாணிக்க வேலு நாயகர், திருத்தணி விநாயகம், 'தினமணி' நாளேட்டின் உரிமையாளரான ராம் னாத் கோயங்காவைத் தோற்கடித்த திருக்குறள் முனிசாமி போன்ற பற்பலர், அந்தத் தேர்தலில் வாகை சூடினார்கள் என்றே பட்டியல் நீண்டது! தலைவர் காமராஜ் அவர்கள் சந்தேகப்பட்டபடி 352 சட்டப் பேரவைத் தொகுதிகளின் இடங்களிலே, காங்கிரஸ் கட்சி 152