பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 தேசியத் தலைவர் காமராஜர் இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாகத் தேர்தலில் வந்ததே தவிர, அமைச்சரவை அமைக்கும் பெரும்பான்மை பலத்தை அது பெறவில்லை; முடியவில்லை! காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக, கம்யூனிஸ்டுக் கட்சி 62 தொகுதிகளிலே வெற்றிபெற்ற கட்சியாகத் திகழ்ந்தது; காங்கிரஸ் கட்சியை எதிர்த்த எதிர்க் கட்சிகள் எல்லாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற ஒரு கூட்டணியை டி. பிரகாசம் தலைமையில் அமைத்தன. இதற்கிடையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குரிய 1952-ஆம் ஆண்டுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை முன்னாள் பிரதமராக இருந்த பி.எஸ். குமாரசாமி ராஜா கட்சியின் தலைவராக வரவேண்டும் என்று இராஜாஜி கூறினார். டாக்டர் சுப்பராயன்தான் கட்சியின் தலைவராக வரவேண்டும் என்று தலைவர் காமராஜ் கருத்தறிவித்தார். காமராஜ் எதிர்ப்பு! இந்த இரண்டு அணிகளுக்கும் நடைபெற்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டாக்டர் சுப்பராயன் வெற்றிபெற்றார் இருந்தும், காங்கிரஸ் கட்சிப் பணிகளைக் காமராஜ் அவர்கள்தான் பொறுப்பேற்றுக் கவனிக்கும் சூழ்நிலை அப்போது அமைந்து விட்டது. முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி சட்டசபை உறுப்பினர்கள் 152 பேர்களோடு, சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களையும் இணைத்துக் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கலாம் என்று காங்கிரஸ்காரர்களிடம் சிலர் கருத்துக் கூறினார்கள். ஆனால், தலைவர் காமராஜ் இந்தக் கருத்தை ஏற்கவில்லை; அதற்குரிய ஆதரவையும் அவர் தரவில்லை பிரதமராக இருந்த குமாரசாமி ராஜாவும் தோற்றுப்போனார். அதனால், அமைச்சரவை அமைக்கும் விவகாரம் பெருங்குழப்பமாக இருந்தது சுதந்திரம் பெற்ற நாட்டில் உருவான முதல் குழப்பம் இது: மக்கள் செல்வாக்கைக் காங்கிரஸ் கட்சி தமிழகத்திலே இழந்தது பரிதாபத்திற்குரிய இழப்பாகவே அன்று அமைந்தது. تابلات عن بنيت تيزيلاني غتينية تقلإنج శె ఙ్గళ్లే | | డ్గ