பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தேசியத் தலைவர் காமராஜர் மிதவாதக் காங்கிரஸ் அணிக்குத் தலைவர் கோபால கிருஷ்ண கோகலே. தீவிரவாத அணிக்குத் தலைவராகத் திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர் பாலகங்காதரர் அணி காங்கிரசை விட்டு வெளியேறியதும், மிதவாத அணியினர் சார்பாக, தலைவர் ராஷ் பிகாரிகோஷ் தனது தலைமையுரையின் சில பகுதிகளை மட்டுமே படித்தார். அவ்வளவு கலவரம் கலாட்டா குழப்பம்! சேலம் விஜயராகவாச்சாரியார், அப்போது திலகர் அணியில் இணைந்து தீவிரவாத திலகமாக விளங்கினார் பிறகு, காங்கிரஸ் கட்சியை விட்டுத் திலகரைப் போலவே சிறிதுகாலம் ஒதுங்கி இருந்தார் திலகரின் தீவிரவாத அணியிலே, தமிழ் நாட்டைச் சேர்ந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை, தியாகி சுப்பிரமணிய சிவா, சி. சுப்பிரமணிய பாரதியார் திரு.வி.கலியான சுந்தர முதலியார், வ.வெ.சு. ஐயர் போன்றவர்கள் இருந்தார்கள். கி.பி. 1916-ஆம் ஆண்டில், இலட்சுமணபுரியில் இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கூடியது. திரு. காந்தியடிகளுடன் மீண்டும் இணைந்து விஜயராகவாச்சாரியார் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டார்! அமிர்தசரஸில் 1919-ஆம் ஆண்டு நடந்த இந்திய தேசீயக் காங்கிரஸ் மகாசபை திரு. மோதிலால் நேரு தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில், திரு. விஜயராகவாச்சாரியார் மக்களின் அடிப்படை உரிமைகள் என்பது குறித்துத் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். நாகபுரி நகரில் 1920-ஆம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபை கூடியது. திரு. சேலம் சி.விஜயராகவாச்சாரியார்அதற்குத் தலைமை வகித்தார். அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபைக்கு முதன் முதலாக தலைமையேற்ற முதல் தமிழன் சேலம் சி. விஜயராகவாச்சாரியாரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. ஆச்சாரியார் தலைமை வகித்த மாநாட்டில்தான், காந்தியடிகளது ஒத்துழையாமைப் போர்த்திட்டம் ஏற்கப்பட்டது. திரு. விஜயராகவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில்தான்; பிரிட்டிஷ் ஆட்சியிடம் இந்திய மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதை முதன் முதலாகத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது! அன்று வரை தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், அகில இந்தியக் காங்கிரஸ் மகாசபையினால் தேர்வு புரியப்பட்ட மூன்று