பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ எதிரி-ஆட்சி அல்ல குலக்கல்வி திட்டம்தான்! பரிதாபத்திற்குரிய காங்கிரஸ் கட்சி 1952-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தமிழகத்தில் அமைச்சரவை அமைக்க முடியாமல் பரிதவித்தது! இருந்தும்கூட, காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதலமைச்சராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற போட்டியும் - குழப்பமும் - அணி மோதல்களும் மிகப் பலமாகவே உருவாயின. இராஜாஜி முதல்வர் காமராஜ் விருப்பம்! இந்த இக்கட்டான சூழ்நிலையில் இராஜாஜியை முதல் மந்திரியாக்கலாம் என்று தலைவர்காமராஜ் விரும்பினார்: காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையேயும் இதே கருத்துதான் பரவலாக எழுந்தது - அதுவே முடிவும் ஆயிற்று. சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பை இராஜாஜியே ஏற்க வேண்டும் என்று தலைவர் காமராஜ் அவர்களும், திரு. நீலம் சஞ்சீவரெட்டியாரும் இராஜாஜியைச்சந்தித்துக் கூறினார்கள்! கல்கத்தாவிலே கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் அதே முடிவைத்தான் தெரிவித்தது. அதனால், அந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ஆம் தேதி சட்டமன்றக் காங்கிரஸ் கட்சி கூடிய பின்பு, தீர்மானம் போட்டு இராஜாஜியை முதன்மந்திரிப் பதவியை ஏற்குமாறு தலைவர்கள், காங்கிரஸ்காரர்கள் அனைவரும் ஒருமனதாகவே பரிந்துரை செய்தார்ககள்! தில்லி மத்திய மந்திரி சபையில் பிரதமராக இருக்கும் பண்டித நேருவின் கருத்தை அறிந்து வருமாறு இராஜாஜி அதற்குப் பதில் கூறினார்: பிரதமர் நேரு அவர்களிடம் ஒரு துதுக்குழு சென்று, தமிழ் நாட்டு அரசியல் நிலையைத் தெளிவாக விளக்கியது. 'யாரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தாலும் அதை நான் ஏற்கிறேன்” என்று பிரதமர் நேரு தெரிவித்தார். ஆனால், “ஏதாவது