பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 தேசியத் தலைவர் காமராஜர் ஒரு சட்டமன்ற தொகுதியில் அவர் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று வரவேண்டும் என்றார்: 1952-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றக் தாங்கிரஸ் கட்சிக் கூட்டம் கூடியது. இராஜாஜி பெயரைத் தலைவர் காமராஜ் அவர்கள் முன்மொழிந்தார்: திருவாளர்கள் என். சஞ்சீவரெட்டி, ஏ.பி. ஷெட்டி, திருமதி குட்டியம்மாள் ஆகியோர் அவர் பெயரை வழிமொழிந்த பின்பு, இராஜாஜி சென்னை மாநில முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதிலே ஒரு சிறப்பு என்னவென்றால், இந்தியா விடுதலை பெற்ற 1947-ஆம் ஆண்டு முதல் சென்னை மாகாணத்தை ஆண்டவர்களுக்கு பிரதமர்கள் என்ற பெயர் இருந்தது. அவ்வாறு ஆண்ட ஆந்திர கேசரி டி. பிரகாசம், ஒமந்துார் இராமசாமி ரெட்டியார், இராஜாபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா ஆகியோரெல்லாம் பிரதமர்கள் என்றே அழைக்கப் பட்டார்கள் அவர்களுக்குப் பிறகு 1952-ஆம் ஆண்டில் திரு. இராஜாஜி சென்னை மாநில ஆட்சித்தலைமைப் பதவியை ஏற்றபோது, அவர் முதலமைச்சர் என்றே அழைக்கப்பட்டார் என்பதை வாசகர்கள் நினைவில் நிறுத்தல் நலம்! இராஜாஜி சட்டமன்ற மேலவை நியமனம்! பொதுத் தேர்தலில் தோற்றுப் போன திரு. குமாரசாமி ராஜா பரிந்துரைத்ததால், தமிழக ஆளுநர் இராஜாஜியைச் சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக நியமித்தார். இந்த மேலவை நியமனநிலை, தலைவர் காமராஜ் அவர்களுக்குத் தெரிவிக்காமலேயே நடைபெற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்! 'சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவி ஏற் பவர் சட்டசபை வேட்பாளராக நின்று வெற்றிபெற்றவராக இருக்க வேண்டும் என்று பிரதமர்நேரு கூறிய நிபந்தனைக்கு விரோதமாக, இராஜாஜி நியமனம் அமைந்து விட்டதே' என்று தலைவர் காமராஜ் அவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது! ஆனாலும், இராஜாஜி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாரே என்ற கட்சிக் கருத்தில் திரு. காமராஜ் எதிர்ப்பேதும் கூறாமல் இருந்துவிட்டார்!