பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 299 1952 - ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள், அமைச்சரவையை இராஜாஜி அமைத்தார் திரு. சி. சுப்பிரமணியம் உட்பட சிலர் அவரது அவையிலே அமைச்சரானார்கள்! எதிர்ப்பு நட்பானது: சிறுபான்மை பலத்தினாலே அமைந்த மந்திரி சபையைப் பெரும்பான்மையாக மாற்றிட இராஜாஜி முயன்றார்: ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்களோடு வெற்றிபெற்று சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ள திரு. எம்.ஏ. மாணிக்கவேலு நாயகரின் காமன்வீல் கட்சியைக் காங்கிரஸ் கட்சியிலே அவர் சேர்த்துக் கொண்டார்! அதனால், திரு. மாணிக்க வேலரும் மந்திரியானார்:

  • திரு இராஜாஜி, முதலமைச்சரானதும் உடனடியாக ஓமந்துர் இராமசாமி ரெட்டியார் தலைவர் காமராஜர் அவர்களிடம் தெரிவித்த கருத்திற்கேற்ப, வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழ்மை மக்கள் பகுதிகளுக்கு இலவச உணவும், கூழ் அல்லது கஞ்சித் தொட்டிகளும் திறக்கப்பட்டன. அன்றாட ஏழைமக்களுக்கான வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.

அந்தநேரத்தில் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மறுதேர்தல் 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திரு. எம். பக்தவத்சலம் வரவேண்டும் என்று இராஜாஜி முயற்சி செய்தார்: ஆனால், மீண்டும் தலைவர் காமராஜ் அவர்களே தலைவராக வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விரும்பினார்கள். காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் கூட்டத்திற்கு முதலமைச்சர் திரு. இராஜாஜி வரவில்லை. அதனால், போட்டியின்றிக் காமராஜ் அவர்களே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராஜாஜி ஆட்சி செய்த சாதனைகள்:

  • இராஜாஜி ஆட்சியில் அமர்ந்ததும் உணவுப் பங் முறையான ரேஷன் திட்டத்தை உடனடியாக நீக்கி மதுவிலக்கு, தீண்டாமை, விவசாய ஒழிப்புக் கடன்களுக் புதிய சாதனைகள் இயற்றினார்.