பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 தேசியத் தலைவர் காமராஜர்

  • தஞ்சைச் சாகுபடியாளர் - பண்ணையாளர் பிரச்னைக்குச் சட்டம் வகுத்து சாதனைகள் புரிந்தார்! அதனால், கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு அங்கங்கே குறைந்தது!

இவ்வளவு செய்த பிறகும் கூட, இராஜாஜி ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை! இராமநாதபுரம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியினர் இடைத்தேர்தலை ராஜாஜி சந்திக்கும் நிலை நேரிட்டது! பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் 1952 -ஆம் ஆண்டு தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலே போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதில் ஒரு தொகுதியிலே இருந்து அவர் ராஜிநாமா செய்ததுதான் அருப்புக்கோட்டை இடைத்தேர்தல்: இடைத்தேர்தல் தோல்வி! அந்தத் தொகுதியிலே வாக்கு சேகரிக்கச் சென்ற இராஜாஜி, "நான் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்றால், காங்கிரஸ் வேட்பாளரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் ' என்று வாக்காளர்களைக் கேட்டார். அதன் எதிரொலி, அந்தத் தொகுதியின் பொதுமக்கள்.காங்கிரஸ் பெண் வேட்பாளராக நின்றவரைத் தோற்கடித்து விட்டார்கள். தேவர்அவர்களை எதிர்த்து வெற்றிபெற முடியாது என்ற நிலைக்கு அந்த வெற்றி சான்றளித்தது! அதற்குத் தீர்வு காணும் வகையில், இராஜாஜி சட்ட சபையிலே தனது அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கைப் பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பதவியிலே நீடித்தார்! "இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது. இனிமேல் காங்கிரஸ் கட்சி அவசியம் இல்லை. அதைக் கலைத்து விடலாம் ' என்று பகிரங்கமாக முன்பு ஒருமுறை காந்தி பெருமான் 'ஹரிஜன் பத்திரிகையிலே எழுதியதை இராஜாஜி மீண்டும் எதிரொலித்தார்: கூறினார்: முதல்வர் இராஜாஜி அவர்கள், காந்தியடிகள் கூறிய கருத்தை மீண்டும் உதாரணத்தோடு, 'காய் பழமாகிறது. பிறகு, பழத்திற்கும் மரத்திற்கும் உறவு அறுந்துவிடுகின்றது. அதுபோல, சுயராச்சியம் கிடைத்துவிட்டது. இனிமேல் மரம் எதற்கு?" என்ற கேள்வியையும் கேட்டார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் இடையே அவருக்குப் பலத்த