பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 301 சலசலப்பும் - எதிர்ப்பும் உருவாயிற்று! அந்த எதிர்ப்பு நாளாவட்டத்தில் பெரிய ஒர் அகில இந்திய சர்ச்சையாக உருவெடுத்து ஆடியது! நாட்டிற்குச்சுதந்திரம் பெறுவதற்காகத் தமது உடல், பொருள், ஆவியைத் தியாகம் புரிந்து பாடுபட்ட காங்கிரஸ் தியாகிகள் பலர், ஐந்து ஏக்கர்நிலத்தை தியாகி நிலம் என்ற பெயரால் அரசிடமிருந்து இலவசமாகப் பெற்றிருந்தார்கள்' "அந்த இலவச நிலத்தை வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடவேண்டும். இனிமேல் புதியதாக எவருக்கும் தியாகி நிலம் கொடுக்கக்கூடாது' என்று முதல்வர் இராஜாஜி உத்திரவிட்டார்! இந்த அரசுக் கட்டளை, இந்திய அளவில் ஒரு பூகம்பப் பிரச்னையாக இராஜாஜிக்கு எதிர்ப்பையே ஏற்படுத்தியது. குறிப்பாகத் தமிழகக் காங்கிரஸ்காரர்களிடையே புயலைப் போன்றதோர் கொந்தளிப்பை உருவாக்கிற்று இந்த எதிர்ப்புக் கனலுக்கு மேலே புதுக் கல்வித் திட்டம் என்ற எண்ணெயை, இராஜாஜி எந்தக் காங்கிரஸ்காரர்களையும் கலந்து யோசிக்காமலேயே ஊற்றினார்! புதுக்கல்வியா? குலக்கல்வியா? 'காலையில் பள்ளிப் படிப்பை மாணவர்கள் கற்க வேண்டும். மாலையில் தனது தொழிற்பயிற்சியை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் புது ஆரம்பக் கல்வித் திட்டத்தின் குறிக்கோள்' என்று இராஜாஜி அதற்கு விளக்கமும் அறிவித்தார்: பிராமணர்கள். சூத்திரர்கள் என்ற சில வார்த்தை பேதங்களும், அதனால் உருவான சில விவகாரங்களும் - குழப்பங்களும் இணைந்த, இந்தத் திட்டத்திற்குக் குலக்கல்வித் திட்டம் என்ற பெயரைத்தந்தை பெரியார் இராமசுவாமி அவர்கள் சூட்டினார்கள்! அதனால், இராஜாஜி பதவி துறந்து வெளியேறும்வரை பெரியார் போராடினார். அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையின் கீழ் இயங்கிய திராவிட முன்னேற்றக் கழகமும், இந்த குலக் கல்வித் திட்டத்தை மிகக் கடுமையாகவும், தீவிரமாகவும் எதிர்த்தது. குலத் தொழிற் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காகவே இந்த புதுக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக, இராஜாஜி அவரது திட்டத்திற்கு விளக்க உரையும் தந்தார்: