பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O2 தேசியத் தலைவர் காமராஜர் நாட்டின் நலனை விரும்பிய நல்லவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள், பிற கட்சியினர்.அனைவரும் கூடி, இந்தத்திட்டத்தை எதிர்த்துப் போர்க்கொடிகளை உயர்த்தினார்கள். தமிழகமெங்கும் குலக் கல்வித் திட்டக்கற்ைகாற்றே கடுமையாக வீசியது. சட்டசபையையும் கலந்தாலோசிக்காமல், எதேச்சாதிகாரமாக இராஜாஜி தனது இந்தக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்று காங்கிரஸ்காரர்கள் எல்லாம் அனல் பறக்கப் பேசினார்கள். “கல்வி அமைச்சரையும், சட்டசபைக் காங்கிரஸ் கட்சியையும் கூட்டிக் கலந்துரையாடாமல், இந்தக் கல்வித் திட்டத்தை வெளியிட்டது சரியா? என்று, தலைவர்காமராஜ் இராஜாஜியைக் கேட்டார் சங்கரரும் - இராமானுஜரும் தங்கள் கொள்கைகளை வெளியிடுவதற்கு முன்பு, அனைவரையும் கலந்தாலோசித்துக் கொண்டா வெளியிட்டார்கள்? என்ற, எதிர்க்கேள்வியை இராஜாஜி எழுப்பினாரே தவிர, இந்த வினா எங்கு கொண்டுபோய் விடும் என்று அவர் சிந்திக்கவில்லை! மழைக்காகப் பிரார்த்தனை? சென்னை மாநகரில் குடிதண்ணீர் பஞ்சம் அப்போது தலைவிரித்தாடியது. சென்னையை விட்டுப் பல்லாயிரக்கணக்கான மக்கள்தண்ணீர்ப் பஞ்சத்தால் வெளியேறி, உள்மாவட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்! சென்னை நகரைவிட்டு வெளியேறும் பொது மக்களைப் பார்த்து, 'நீங்கள் ஆண்டவனை வேண்டுங்கள். குறிப்பிட்ட நாளன்று ஆலயங்கள், மசூதிகள், கிறித்தவத் தேவாலயங்கள், மற்றும் இதரவழிபாட்டுத்தலங்களில் பிரார்த்தனை செய்யுங்கள்." என்று, அப்போது மதகுரு போல சென்னை மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 'சட்டப் பேரவையில் மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறார் இராஜாஜி' என்று கண்டனக் கிண்டல்களோடு ப. ஜீவானந்தம் என்ற கம்யூனிஸ்டு தலைவர் ஆடியபடியே பேசிக் கண்டனக் குரலை எழுப்பினார்: ஆனால், அற்புதமான அதிசயம் என்னவென்றால், இராஜாஜி அவர்கள் கூறியபடியே 24 மணிநேரத்திற்குள் ஏரிகள் நிரம்பி வழியும்படி மழையும் பொழிந்தது!