பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 303 சட்ட சபையில் ஒங்காரமிட்டுக் குரல் கொடுத்த அதே ஜீவானந்தமும், பிற கம்யூனிஸ்டுகளும் மழைபெய்ததைக் கண்ட பின்பு, 'இது ஒரு தற்செயல் நிகழ்ச்சி' என்று மழுப்பினார்கள்! தமிழ்நாடு இவ்வாறு பரபரப்பில் ஆழ்ந்திருந்தபோது, மதுரை மாநகரில் டி. வி. எஸ். மோட்டார் நிறுவன விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில், சர்.சி. பி. இராமசாமி ஐயர் பேசிய பின்பு, முதல்வர் இராஜாஜி பேசும்போது, 'சூத்திரன் செய்ய வேண்டிய மோட்டார்த் தொழிலைப் பிராமணர் செய்யலாமா? என்ற கேள்வியைக் கேட்டார். இந்தப் பேச்சு, தலைவர் காமராஜ் அவர்களுக்குக் கடுமையான கோபத்தையும்- எரிச்சலையும் மூட்டிவிட்டது. அதே விழாவில் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் இராஜாஜி, டி.வி.சுந்தரம் ஐயங்கார் வயதானதும், இந்தத் தொழிலைத் தனது பிள்ளைகளிடம் ஒப்படைத்திருக்கிறார். அவரது செயலை நான் பாராட்டுகிறேன்.” என்றார்! தலைவர் காமராஜ் அவர்கள் அதே விழாவில் அடுத்துப் பேசியபோது, 'வாலிபர்களிடம் வயோதிகர்கள் பொறுப்பை ஒப்படைப்பதுதான் சிறந்தது' என்று பாராட்டினர்: இராஜாஜி பேசிய அந்தக் கருத்தை நான் ஆதரிக்கிறேன். வர்த்தகத்தில் மட்டுமல்ல; அரசு நிர்வாகத்திலும் கூட அந்த வழியை வயோதிகர்கள் பின்பற்றினால் நாட்டிற்கு நிச்சயமாக நன்மை உண்டாகும்' என்றார். சற்றும் எதிர்பாராமல், சமயோசிதமாகத் தலைவர் காமராஜ் இவ்வாறு பேசிய பேச்சைக்கேட்ட இராஜாஜி, அதிர்ச்சியடைந்தார் மக்கள் நீண்ட நேரம் கையொலி எழுப்பியது, காமராஜ் அவர்களது பேச்சை முழுமனதோடு - அவர்கள் ஆதரிப்பது போல அக்காட்சி அமைந்துவிட்டது. - இராஜாஜியின் ஆட்சி மீது தனது கருத்து என்ன என்பதைத் தலைவர் காமராஜ் சுற்றி வளைக்காமல், அவரது பேச்சை ஏற்றே தனது எண்ணத்தை நேரிடையாகவே கூறிவிட்டார். குலக்கல்வித் திட்டம் பற்றிச் சட்ட சபையில் நெருப்புப் பொறிகள் பறப்பன போல, தட்பவெப்ப வாதப் பிரதிவாதங்கள் நடந்தன எதிர்க்கட்சியினர் போர்க்களமாகக் கருதி வீராவேசமாகப் பேசினார்கள். நடைபெற்ற விவாதங்களின் மீது ஒட்டெடுப்புகள் ஏதும் நடத்தாமல் அப்போதைக்குப் பிரச்னையை ஒத்திவைக்கத் தலைவர் காமராஜ் அறிவுரை கூறினார்.