பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 தேசியத் தலைவர் காமராஜர் இது தலைவரின் ராஜதந்திரம் என்று நம்பிக் காங்கிரசார் வாளாவிருந்தனர். இருந்தும், குலக்கல்வித் திட்டம் நாட்டில் ஒரு நெருப்பு பிழம்பைச்சுழற்றி வீசியபடியே இருந்தது. தந்தை பெரியார் அவர்கள்.இராஜாஜிகுலக்கல்வியை எதிர்த்துப் போர்க்கொடி ஏந்திப் படைகளைத் திரட்ட ஆரம்பித்து விட்டார். அறிஞர் அண்ணா அவர்கள் கண்டனக் கட்டுரைக் கணைகளையும், மேடைகள் தோறும் நா அம்புகளையும் இராஜாஜிகல்விதிட்டத்தின் மீது நயமாக வீசியபடியே இருந்தார். இராஜாஜிமீது தார் வீச்சு! 1947-ஆம்ஆண்டுசட்டப்பேரவைக்காங்கிரஸ் கட்சித்தலைமைப் பதவியிலே இருந்து ஆந்திரகேசரி.டி. பிரகாசம் நீக்கப்பட்டு, ஓமந்துர் இராமசாமி ரெட்டியார் முதல்வரானதும், ஆந்திரர்களிடையே தனி மாநிலக் கிளர்ச்சி தீவிரமடைந்தது. ராஜாஜி முதலமைச்சரானதும், அந்தக்கிளர்ச்சி அதிகமானது. அவர்ஆந்திரமாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடந்தன: இராஜாஜி மீது தார்ச்சட்டிகளை வீசிய வன்முறைச்சம்பவங்களும் அதிகரித்தன. சுதந்திரப் போராட்ட வீரரான பொட்டியூரீராமுலு என்பவர், தனி ஆந்திரமாநிலக் கோரிக்கையை வற்புறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார். அவர்மரணம்ஆந்திரமாநிலம் முழுவதும் பரவியதால், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் வரம்பின்றி நடந்தன. இரயில்கள் நிறுத்தப்பட்டன. துப்பாக்கிச் சூடுகள், தடியடிகள், கண்ணிர்ப் புகைக் குண்டுகள் பிரயோகங்கள் எல்லாம் நடந்தேறின. சென்னை மாநகரத்தை இரண்டாகப் பிரித்து வட சென்னையை ஆந்திரர்களுக்கும், தென்சென்னையை தமிழர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றனர்ஆந்திரர்கள். முடிவாக ஆந்திரமாநிலம் பிரிவது உறுதியாயிற்று. மதராஸ் மனதே! இதற்குப் பிறகு, மதராஸ் மனதே என்ற கோஷம் ஆந்திரா முழுவதும் எதிரொலித்தது! இரண்டாகச் சென்னை மாநநகரம் பிரிக்கப்படுவதை முதலமைச்சரான இராஜாஜி விருப்பவில்லை! ஆனாலும், மதராஸ் மனதே" என்று கூக் குரல் எழுப்பிய ஆந்திரர்களைப் பார்த்து, “புதிதாக அமைக்கப்படும் ஆந்திர