பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 305 மாநிலத்திற்கு கர்நூல் நகரைத் தலைநகரமாக வைத்துக் கொள்ளுங்கள்' என்றார்: இராஜாஜி மட்டும் உறுதியாக இந்த இலட்சியத்தில் இருக்கவில்லை என்றால், சென்னை மாநகரமும் திருப்பதி நகரைப் போல் கை மாறி இருக்குமோ என்னவோ! யார் கண்டார்? புதிதாக உதயமான ஆந்திர மாநிலத்திற்குத் தலைநகரமாகக் கர்நூல் நகரை அமைத்துக் கொண்டார்கள் ஆந்திரர்கள் ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்து விட்டதால், சென்னை மாநில சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் புதிதாக நடத்தப்பட வேண்டும் என்ற கிளர்ச்சி ஆரம்பமானது. தான் தொடர்ந்து முதலமைச்சராக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவதாகக் கூறி, சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தைக்கூட்டுவதாக இராஜாஜி அறிக்கை விடுத்தார். அதற்கு அடுத்த நாள், நான் தலைவராக இருப்பதில் தனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்று காமராஜ் கூறியதால், நான் சட்டசபைக் கட்சிக் கூட்டத்தை நடத்த விரும்பவில்லை” என்று மறு அறிக்கை விட்டார் முதலமைச்சர் இராஜாஜி! தலைவர் காமராஜ் அவர்கள் மேல் ஒர் அரசியல் களங்கத்தை உருவாக்கவே இராஜாஜி மாறிமாறி அறிக்கைப்போர் மூலமாகச் செயல்பட்டார் என்று, காமராஜ் அணி செய்தியைப் பரப்பியது காமராஜ் பற்றி அப்யாமுத்து! 3. காமராஜ், இப்போது யாருக்கும் அஞ்சாத காளையாகி விட்டார் அவர் தயவைத்தான் அரசியலில் பிறர் நாடுகிறார்களே அன்றி, யார் தயவையும் அவர் என்றும் நாடியதில்லை. காமராஜ் கடைக்கண் பார்வைக்காகக் காங்கிரஸ் தலைவர்கள் எனப்படும் அப்பாவிகள் தவங்கிடக்கிறார்கள்' காமராஜைக் காமா சோமா என்று துதிபாடுகிறார்கள். கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடச் சிலர் ஆமாம் சாமிகளாக அலைகிறார்கள். 'கோவலன் நாடகத்திலே மாதவியின் மாலைக்காக அவன் கழுத்தை நீட்டியதைப் போல, பலர் காமராஜரின் கருணைக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள். காமராஜர் திக்குநோக்கிக் கையெடுத்துக் கும் பிடுகிறார்கள். அதனால், அறிவாளிகள் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள். '