பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O6 தேசியத் தலைவர் காமராஜர் -என்று, இராஜாஜி அணியினர் துண்டறிக்கைகளை அச்சடித்தார்கள்; வெளியிட்டார்கள் குலக்கல்வித் திட்டம் என்ற பெருநெருப்பு இவ்வாறெல்லாம் ஆவேசமாகத் தன் தீக்கதிர்களைத் தமிழ்நாட்டில் சுழற்றி வீசிக் கொண்டிருந்தது. 'இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தகராறுகள்தான், நாட்டில் குழப்பத்தை உருவாக்கியதே தவிர, அவரது ஆட்சித்தலைமை என்ற தகராறுகள் அல்ல என்பதைத்தலைவர்காமராஜ் திட்டவட்டமாகத் தனது இராஜதந்திரத்தின்மூலம் நாட்டிற்குத் தெரிவித்து விட்டார். ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்துபோனபின்பு, இராஜாஜி அமைச்சரவையில் ஒன்பது பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். இவர்கள் போதாது என்று புதிய மந்திரிகள் சிலரை நியமிக்க, தலைவர்காமராஜரைக் கலந்து இராஜாஜி பேசினார்: அதற்குக் காமராஜ் அவர்கள், ஒப்பவில்லை. ஆந்திராவும் பிரிந்துவிட்டது. அமைச்சர்களும் ஒன்பது பேர் இருக்கிறார்கள்! பிறகு ஏன் புதிய மந்திரிகள்? என்று, இராஜாஜியைக் காமராஜ் கேட்டார். தலைவர் கேட்ட கேள்வியைப் பொருட்படுத்தாமல், டில்லியிலே உள்ள காங்கிரஸ் கட்சித்தலைவருக்கும், பிரதமர் நேரு அவர்களுக்கும் இராஜாஜி கடிதம் எழுதினார். தமிழ்நாட்டின் சர்ச்சைகளை அவர் மேலும் பெரிதுபடுத்த விரும்பாததால், மூன்று அமைச்சர்களை நியமித்துக் கொள்ள அங்கே இருப்பவர்கள் பதில் எழுதினார்கள். இராஜாஜி மூவரை அமைச்சர்களாகத் தனது அவையில் நியமித்துக் கொண்டார். நாட்டில் மூண்டு எரிந்துகொண்டிருக்கும் குலக்கல்வித் திட்டப் பரபரப்பைக் காட்டி, இராஜாஜி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியினர் கொண்டு வந்தார்கள். 'நம்பிக்கை இருக்கிறது என்ற கையெழுத்துக்களைப் பெற்றிட இராஜாஜி அணியினர் முயன்றார்கள். காங்கிரஸ்காரர்களில் பெரும்பான்மையினர் அதற்கு மறுத்தார்கள்! அதனால், இராஜாஜிக்கு அரசியல் நெருக்கடி அதிகமானது. 'இராஜாஜியே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நேரு அறிக்கை விடுத்தார். தலைவர் காமராஜ் அணியினர், டில்லி சென்று, தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடிநிலை, குலக் கல்வித் திட்டத்தால் உருவானதை எடுத்துக் கூறினார்கள்.