பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 17 பொதுச் செயலாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்தியப் புகழை எதிர்காலத்தில் அவர் தேசிய அளவில் பெற்றிட வித்துான்றப்பட்டது விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்த மாநாட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஒத்துழையாமைத்திட்டத்தைப் பிரகடனம் செய்வதென்றால், குறிப்பிட்ட ஒன்றிரண்டு அநீதிகளைப் பொறுத்ததாக மட்டும் அது ஏன் இருக்க வேண்டும் ? என்று காந்தியடிகளையே விஜயராகவாச்சாரியார் கேள்வி கேட்டார்! 'இந்தியா அனுபவித்துக் கொண்டிருக்கும் பெரிய அநீதி, அதற்குச் சுதந்திரம் இல்லாதிருப்பதால்தான் ஒத்துழையாமை, அந்த அநீதியை எதிர்த்துப் போராடுவதாக இருக்க வேண்டும் என்ற பதிலையும் அவரே கொடுத்தார்: இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகத்தான் ஒத்துழையாமைப் போர் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதைக் காந்தியடிகளே தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் திட்டத்தை ஏற்றுப் பெருமைப்படுத்திய முதல் தமிழரும் அவர்தான்! அவர் தலைமையில்தான், அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியில் காந்தியடிகள் சகாப்தம் தோன்றியது. வரலாறு தெரிந்தோர் இதை அறிவார்கள். எந்தத் திலகரின் தீவிரவாதக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் மகாசபையை விட்டு விஜயராகவாச்சாரியார் வெளியேறினாரோ, அவரே மீண்டும், அதே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் காந்தியடிகளின் நேயத்தோடு சேர்ந்தார். திலகரின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள், வட நாட்டிலும் சரி - தென் நாட்டிலும் சரி, அரசியலில் அவர்களின் கடைசி நாட்கள் மிகமிக அவலமாகவே முடிந்திருக்கிறது! ஏன்? திலகர் மட்டும் என்ன? குன்றின் மேலிட்டத் தீபமாகவா அரசியலிலே விளங்கினார் பாவம்! பாவம்! அவர்கதியும் அதோகதிதான்! அவர் தொடங்கிய பெரும் பயணத்தில் காந்தியடிகள் கலந்துகொண்டு புகழ் படைத்தார் நீண்ட சிறைத் தண்டனைகளை அனுபவித்து திலகர் ஒரங்கட்டப்பட்ட பின்பு, மீண்டும் அவர் அதே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலேதான் இணைந்தார்! ஒர் உண்மையை நாம் உணரவேண்டும். அதாவது அவரவர்களுக்கு இருந்த தாய் மொழிப் பற்றுத்தான் - இலக்கியத் தொண்டுதான் அவர்கள் பெயரை மக்களிடத்திலே மாண்புற வைத்ததே தவிர, அரசியல்வித்தகர்கள் அவர்கள் என்பதால் அல்லர்