பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 307 'உங்களுடைய ஆட்சியில் நீங்கள் எப்படியும் தீர்மானம் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது' என்று, பிரதமர் நேரு அந்த தூதுக் குழுவிடம் கூறியதும், மறுபடியும் இராஜாஜிக்கு அரசியல் நெருக்கடிநிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் அரசியலிலிருந்து சரியான நேரத்தில் ஓய்வுபெற்றுவிடவேண்டும். இல்லாவிட்டால், அவர் அரசியலில் நீடிப்பது அவரது வீழ்ச்சிக்கே வழிவகுத்துவிடும் என்ற திருப்புமுனையை இராஜாஜி மறந்தார்: - திருவாளர்கள்: டாக்டர் வரதராஜலு நாயுடு, வி.கே. இராமசாமி முதலியார், கே.டி. கோசல்ராம், டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, பஞ்சாட்சரம் செட்டியார், ஏ.எம்.சம்பந்தம் போன்ற சட்டசபைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இராஜாஜியை எதிர்த்தும், குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்தும் போர்க் கொடியைத் துக்கினார்கள். குலக் கல்வித் திட்டத்தின்மீது சட்டசபையில் ஒட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று மேற்கண்டவர்கள் வற்புறுத்தினார்கள். உடனே தலைவர் காமராஜ் அவர்கள் குறுக்கிட்டு, 'ஒட்டெடுப்பு நடத்த வேண்டாம் ஒத்திவையுங்கள் என்று கட்டளையிட்டார். "குலக் கல்வித் திட்டத்தின் மீது, வாக்கெடுப்பு நடத்தி என்னை அவமானப்படுத்த வேண்டாம். எனக்கும் உடல்நிலை சரியில்லை. நானே விலகிக் கொள்கிறேன் - என்றுகூறி இராஜாஜி முதலமைச்சர் பதவியையும் சட்டசபைக் கட்சிப் பதவியையும் விட்டு விலகினார்: பிரதமர் நேருவும் அதை ஒப்புக் கொண்டார். 1954- ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 25-ஆம் நாள், சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தலைவர் காமராஜ் அவர்களும் - இராஜாஜியும் கலந்து பேசினார்கள். 'திருவாளர்கள் எம். பக்தவத்சலம், ஏ.பி. ஷெட்டி, சி. சுப்பிரமணியம் மூவரில் யாரையாவது ஒருவரையே முதலமைச்சராக இரண்டு மூன்று மாதங்களுக்கு வைத்துக் கொள்வோம். தமிழக நிதிநிலைக் கூட்டத்திற்குப்பிறகு, கட்சித்தலைவர் தேர்தலை நடத்தலாம்' என்று இராஜாஜி கூறினார்: உடனே தலைவர்காமராஜ் அவர்கள் எழுந்து, இராஜாஜி கூறும் இந்த ஏற்பாட்டைப்பட்ஜெட்கூட்டத்தை ஒட்டி இரண்டு மாதத்திற்கு நான் ஒப்புக்கொள்கிறேன் என்றார். இராஜாஜி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. உடனே காமராஜ் அணியினர்கடுமையாகக் கூச்சலிட்டனர். எதிர்ப்பு அதிகமாயிற்று. சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தை இப்போதே நடத்த வேண்டும் என்று அனைவரும் ஒரேகுரலோடு வற்புறுத்தினார்கள்!