பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O8 தேசியத் தலைவர் காமராஜர் "இன்னும் ஐந்து நாட்கள் பொறுங்கள்! 30-ஆம் தேதி நடத்திவிடலாம்” என்று இராஜாஜி கூறினார். தலைவர் தேர்தலுக்கு நான்கு நாட்கள் அவகாசம் மிகவும் குறைவானது என்று உறுப்பினர்கள் எல்லோரும் ஆவேசம ாகக் கூறினார்கள் உடனே இராஜாஜி, 30-ஆம் தேதி தலைவர் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்று, பிடிவாதமாகப் பேசினார்: நாட்கள் குறைவாக இருந்ததால், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் கஷ்டம் இருந்தது. இராஜாஜி அணியில் உள்ள திரு. ஷெட்டிஒருவரைத்தான்காமராஜ் அணி ஆதரிக்கும் நிலை. ஆனால், திரு. சி. சுப்பிரமணியம் அவர்களை இராஜாஜி அணி நிறுத்தியது. தலைவர் காமராஜ் அவர்களே சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவராக வரவேண்டும் என்ற வேட்கை - ஆர்வம் - காமராஜ் அணியினருக்கு அளவுக்கு மீறி உருவாயிற்று சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் ஆரம்பமானது. சி.சுப்பிரமணியம் எழுந்து சமரசம் பேசுவதற்காகக் கூட்டத்தை ஒத்திப்போடும்படி காமராஜ் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 'டில்லியிலே உள்ள தலைவர்களே 30-ஆம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும் என்று எழுதிய கடிதத்தை சி.சுப்பிரமணியத்திடம் காட்டி, கூட்டத்தைத் தள்ளிப்போட முடியாது’ என்று காமராஜ் அணியினர் மறுத்தார்கள். காமராஜ் அணியினரும் - தலைவரும் அதற்குச்சம்மதம் கூறவில்லை. சிறிதுநேரமாவது ஒத்திவையுங்கள் என்று சி. சுப்பிரமணியம் கேட்டார். அதனால் என்ன பயன்? என்று தலைவர்காமராஜ் கேட்டார்: தலைவர் காமராஜ் பெயரை, டாக்டர் வரதராஜலு நாயுடு முன் மொழிந்தார் திருவண்ணாமலை என். அண்ணாமலைப் பிள்ளை அதை வழிமொழிந்தார். எம். பக்தவத்சலம் சி. சுப்பிரமணியம் பெயரை முன்மொழிந்தார். டாக்டர் யூ. கிருஷ்ணராவ் வழி மொழிந்தார். வாக்கெடுப்பு நடந்தது. தலைவர் காமராஜ் அவர்கள், 93 வாக்குகளைப் பெற்று சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவராக வெற்றி பெற்றார். பின்னர் தனது அரசியல் ஆசானின் இல்லத்திற்குச் சென்று, சத்தியமூர்த்தி அவர்களது திருஉருவப்படத்தின் முன்னே தனது சென்னியைச் சாய்த்து வணங்கி, அவருடைய துணைவியாரிடம் வாழ்த்தினைப் பெற்றார். 'அந்த அம்மையார் இந்தக் காட்சியைப் பார்த்துப் பூரித்திட அய்யர் இல்லையே! நல்லபடியாக ஆட்சியை நடத்துங்கள்' என்று அவரை மனமார ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைததாா.