பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இகாமராஜர் பிரதமர் அல்லர்! தமிழக முதலமைச்சர் ஆனார்: தமிழக சட்டசபைக் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. காமராஜர் தமிழக முதலமைச்சர் ஆனார்; நேராக டில்லி சென்றார்! பிரதமர் நேரு அவர்களிடம் தனது வெற்றியைக் கூறிக் கலந்தாலோசித்தார்! 'நல்ல நாணயமான அனுபவம் வாய்ந்த ஒருவரைத்துணையாக நியமித்துக்கொண்டு நீங்களேமுதல்வராக ஆட்சி நடத்துங்கள் என்று பிரதமர் நேரு வாழ்த்தினார்! “வேறு ஒருவரைத் தமிழக முதல் மந்திரியாக்கலாமா?’ என்று டில்லியிலே உள்ள பிற தலைவர்களைக் கேட்டார் காமராஜர். சட்டசபைக்காங்கிரஸ்கட்சித்தலைவர்தான்முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று, அவர்கள்அறிவித்தார்கள். பிறகு சென்னை வந்தார்: தமது கட்சி நண்பர்களுடன் கலந்துரையாடினார். மீண்டும் தலைவர் தேர்தலை நடத்திடலாமா? என்று அவர்களையும் கேட்டார். அவ்வாறு நடந்தால், புதுப்புது விவகாரங்கள் தலைதுாக்கும்’ என்றனர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள். நான் கேட்கும் நிபந்தனைக்கு நீங்கள் சம்மதித்தால் நான் முதலமைச்சராவேன்' என்று தலைவர் காமராஜ் கூறினார் நான் முதலமைச்சரான பின்பு, அமைச்சராக அவரைப் போடவேண்டும் - இவரைப் போட வேண்டும் என்று யாரும் கூறக்கூடாது. அதற்குச்சம்மதமானால் நான் முதல் மந்திரியாவேன்' என்றதும், எல்லோரும் ஒரே குரலில் சம்மதம் தெரிவித்தனர். 1954-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாளன்று, காமராஜ் அவர்கள் தமிழக முதலமைச்சர் பதவியை ஏற்றார். இராஜாஜி மந்திரி சபையில் தன்னை எதிர்த்தவர்களையும் மந்திரி சபையில் பெருந்தன்மையுடன் சேர்த்துக் கொண்டார். அவ்வாறு அவரால் சேர்க்கப்பட்டவர்களுள் சி. சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம் போன்றோருமாவர்.