பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 O தேசியத் தலைவர் காமராஜர் பன்னிரண்டு மந்திரிகளாக இருந்த இராஜாஜி அமைச்சரவையைத் தலைவர் காமராஜர் எட்டாகக் குறைத்துக் கொண்டார். தனது அணி நண்பர்கள் யார் யார் இராஜாஜியைத் தீவிரமாக எதிர்த்தார்களோ, அவர்கள் எவரையும் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது இங்கே சிந்திக்கத்தக்க ஒன்றாகும். காமன்வீல் கட்சித் தலைவரான எம்.ஏ. மாணிக்கவேலரை, இராஜாஜி தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பைக் குறைத்துக் கொண்டார். தலைவர் காமராஜ் அவர்களும் வன்னியர்கட்சியான உழைப்பாளர்கட்சியைத் சேர்ந்த எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியைத் தனது மந்திரி சபையிலே சேர்த்துக் கொண்டு, வன்னிய பெருமக்களின் ஆதரவைக் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக்கினார். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் - வெளியேயும் எவ்விதமான பகையுமில்லாமல் செய்தவர் தலைவர் காமராஜ் அவர்கள்தான் என்பதை அரசியல் வரலாறுணர்ந்தவர்கள் அறிவார்கள். முதலமைச்சராகக் காமராஜ் அவர்கள் பதவியேற்றபோது, அவர் சட்டமன்ற உறுப்பினர் அல்லர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். சட்டமன்ற சபை உறுப்பினரல்லாத ஒருவர் முதலமைச்சர் பதவியைப் பெற்றால், அவர், ஒன்று சட்ட மேலவை அல்லது சட்டப் பேரவை உறுப்பினராக இருத்தல் வேண்டும் என்பது அரசியல் சட்ட விதி: குடியேற்றம் தொகுதியில் காமராஜர் போட்டி! மேலவை உறுப்பினராதல் மிக எளிய செயல். அதனால், மக்கள் குறை நிறைகளைக் கவனிக்க முடியாது. ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியிலே போட்டியிட்டு வெற்றிபெறுவதுதான் உண்மையான மக்களாட்சி மரபு - ஜனநாயகமும் கூட என்று கருதினார் தலைவர் காமராஜ் அவர்கள். வடார்க்காடு மாவட்டத்திலே அப்போது காலியாக இருந்தது குடியேற்றம் தொகுதியாதலால், அங்கேயே சட்டசபைக்குப் போட்டியிட அவர் முடிவு செய்தார். காமராஜ் அவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர், காங்கிரஸ் ஆட்சியின் முதலமைச்சர் என்று தெரிந்தும்கூட, திராவிடர்கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்த பிற கட்சிகள் எல்லாம் அவரைக் குடியேற்றம் தொகுதித் தேர்தலிலே ஆதரித்தன. அறிஞர் அண்ணா அவர்கள், காம ராஜர்காங்கிரஸ்காரர்