பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 31? என்று தெரிந்த பிறகும் கூட, மனிதநேயத்தோடு அவர் வெற்றிபெற வேண்டும் என்று எண்ணினார். அவரது வெற்றியை விரும்பித் தனது திராவிடநாடு பத்திரிகையிலே குணாளா, குலக்கொழுந்தே என்று எழுதினார். காமராஜர் ஒரு திறந்த புத்தகம் என்று மனம் திறந்து பாராட்டி, அவர் வெற்றி பெறுவதைத் தடுக்காமல் - எதிர்க்காமல், ஜனநாயகப் பண்போடு வாழ்த்தினார். இதற்கு என்ன காரணம்? மறுபடியும், இராஜாஜி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துவிடக் கூடாது என்ற அச்சம்தானே தவிர, வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை - அறிஞர் அண்ணா அவர்களுக்கு குடியேற்றம் (குடியாத்தம்) தொகுதியிலே போட்டியிட்ட காமராஜருக்கு எல்லாக் கட்சியினரும் ஆதரவு தந்து அவரை வெற்றி பெறச் செய்தனர் என்றால், அப்போதைய தமிழகம் அரசியல் நெருக்கடியால் அவ்வாறு குழம்பி இருந்ததே காரணமாகும். இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சி வரலாற்றிலே வியப்பை விளைவித்த ஒன்றாகவே திகழ்ந்தது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு! சென்னை ரிசர்வ் வங்கிக் கட்டடத்திற்கு எதிரில், ஒரு சுரங்கப் பாதை கட்ட வேண்டும். ஆனால், அந்தப் பகுதியிலே உள்ள மக்களும் மின்சார இரயில் வண்டிகளும் தடையின்றிச்சாலையைக் கடந்து போக வசதியாக இருக்கும் என்பது தமிழக அரசுத்திட்டம். அந்தப் பாதை கட்டுவதற்கான செலவு என்ன ஆகின்றதோ அதனை, மாநிலஅரசும் மத்திய அரசும் பங்கீடு செய்து கொள்வதென ஒப்பந்தமானது. அந்தப் பாலப் பாதையைக்கட்டும் பொறுப்புக் குழு அதிகாரிகளும், சம்பந்தப்பட்டமத்திய அமைச்சரும், தமிழ்நாடுஅரசு சார்பாகத் தலைவர் காமராஜர் அவர்களும் கலந்துரையாடினார்கள். மத்திய அமைச்சர் அக்குழுவில் பேசும்போது, இந்தச் சுரங்கப் பாதையைக் கட்டி முடித்திட செலவு அதிகமாகும்' என்றார். கடுங்கோபம் வந்தது காமராஜ் அவர்களுக்கு எரிச்சலோடு பார்த்தார் அமைச்சரை 'உட்காரய்யா! கட்டமுடியாதுன்னு சொல்லவா கான்ஃபரன்ஸ் போட்டோம் ? எப்படியும் கட்டி முடிக்கிறதுன்னங்கறதுக்குத்தான் இந்த மீட்டிங் ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டுகின்ற மீட்டிங் அல்ல இது!” 'முடியாதுன்னு சொல்லவா நீங்க மந்திரியானிங்க? மந்திரின்னா, எப்படிச் செய்து முடிக்க முடியும்னு வழி தேடறவன்