பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 தேசியத் தலைவர் காமராஜர் - முடியாதுன்னு சொல்றவன் இல்லை. முடியாதுன்னு சொல்லவா டெல்லியிலே இருந்து இங்கே வந்தீங்க? அங்கே இருந்தே சொல்லியிருக்கலாமே!” 'முடியாதாம் முடியாது...' இதுக்கா ஜனங்க ஒட்டுப் போட்டாங்க? நீ பேசாம உட்காரய்யா நான் பிரை மினிஸ்டர்கிட்டே பேசிக்கிறேன். எப்படியும் சுரங்கப்பாதை கட்டணும். அதுதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க!” என்றார் காமராஜர்! பாவம் மத்திய அமைச்சர் அசந்துபோனார்; ஆடிவிட்டார்; திகைத்துத் திணறிப்போனார். பிறகு அந்தச் சுரங்கப்பாதையும் கட்டப்பட்டது. இத்தகைய ஒரு செயல் வீரர், மக்களுக்காகத் தொண்டாற்றும் கர்மவீரர், மத்திய அமைச்சரவையையே ஆட்டிப்படைத்து மக்களுக்கான சாலைவசதியைச் செய்து கொடுத்த மக்கள் தொண்டர், முதலமைச்சராக வந்துள்ளாரே என்று பெரிதும் மகிழ்ச்சியுற்று, அவரது வாக்கை வேதவாக்காக மதித்து, தமிழ் மக்கள் வழிநடந்தார்கள். காமராஜ் அவர்கள் முதலமைச்சரான பின்பு, தமிழக மக்களுக்குக் கூறிய நற்செய்தி நமக்கெல்லாம் புத்துயிர் அளித்தது. 'நாள் முழுவதும் உழைப்பவர்களை வேலைக்காரர் - கூலிக்காரர் என்று குறை கூறுகின்றோம். உழைப்பே இல்லாமல், பிறர் உழைப்பால் வாழ்ந்து வரும் சோம்பேறிகளை எஜமானர்- மகராசர் என்கின்றோம். ஏழைகளின் துயரம் நீங்கவே நான் முதன் மந்திரி எனப் பதவி ஏற்றுள்ளேன். இல்லையேல், எனக்கு இந்தப் பதவி தேவையில்லை' என்று காமராஜ் அவர்கள் அறிக்கை விடுத்தார். மக்களுக்கும் - அவருக்கும் இடையே அவருடைய தொண்டு பாலமாக அமைந்தது. அதனால்தான், அவர்மீது பாசமுள்ள மக்கள், பக்தர்கள் ஒலிக்கும் தெய்விக சுலோகங்களைப் போல, காமராஜர் வாழ்க, தலைவர் வாழ்க, வாழ்க காமராஜர் என்ற முழக்கங்களை எப்போதும் முழங்கலானார்கள்! காமராஜர் அவர்கள் திருஉருவப்படம், ஏழை - பணக்காரன் என்ற பேதமில்லாமல், எல்லா வீடுகளிலும் தேசபக்தியின் சின்னமாக தொண்டின் அடையாளமாக; அலங்கரித்துக் கொண்டிருப்பதை இன்றும் நாம் காண்கின்றோம்! தமிழக முதல் அமைச்சராகக்காமராஜ் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு, முழுக்க முழுக்கக் காந்தியடிகளின் அஹிம்சை என்ற தத்துவக் காலடிச் சுவடுகளை ஒட்டியே அடியெடுத்து வைத்தார்!