பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 343 பிரதமர் பண்டித நேருவின் அரசியல் பாதையிலே அவர் கம்பீரமாகப் பவனி வந்தார் தனக்கு எது நியாயம் என்று தனது மனச் சான்று கூறுகின்றதோ - அதற்கேற்ப நேர்மைப் பயணம் புரிந்தர்! அரசியல் குரு துணைவி வாழ்த்து! காமராஜர் எனது கணவருடன் இருபதாண்டு காலமாக நாட்டுப் பணியாற்றிய நல்லவர். அவருடைய தியாக உணர்ச்சி, மக்கட் தொண்டு முதலிய பண்புகளுடன், எனது கணவருக்கும் உறுதுணையாக நின்று காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தி, நிலைநாட்ட ஓயாது பாடுபட்ட ஒழுக்கச் செம்மல், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார்." “காமராஜ், தமிழ்நாட்டின் முதன் மந்திரி பதவியை வகிப்பது, எனது கணவரின் கனவு நனவாகிப் பலித்ததற்குச் சான்றாகும் - என்று எஸ். சத்தியமூர்த்தி அவர்களது துணைவியார் திருமதி எஸ். பாலசுந்திரம்மாள் கண்ணிருடன் நன்றி அறிக்கை விடுத்தார். ஆசான் ஆசையை நிறைவேற்றிய அரசியல் மாணவர் காமராஜர் என்று, பிற்காலத்தில் அவரது அரசியல் எதிரிகளும் புகழ்பாடினார்கள்! பிரதமர் நேரு வாழ்த்து! "தளராத மக்கள் தொண்டும், தலைகுனியாத கட்சித் தொண்டும் தலைவர்காமராஜ் அவர்களைத் தமிழக முதலமைச்சராக்கியுள்ளன. இவர் தனது மதிநுட்பத்தால் எதிர்காலத்தில் பாரதம் முழுவதையும் மேன்மையடையச் செய்வார் மக்கட் தொண்டில் காமராஜ் அவர்களை ஒப்பார் காண்பது அரிது. அவரை அறியும் வாய்ப்பு மட்டுமல்ல; பழகும் சந்தர்ப்பங்களும் எனக்குக் கிடைத்துள்ளன. அவருடன் பழகப் பழக, எனக்கு அவரிடமுள்ள மதிப்பும் - மரியாதையும் உயர்ந்து கொண்டே போகின்றன. திறமை, நாணயம், நல்லாட்சி முறைகளுக்கு எடுத்துக் காட்டாக இருக்கும் ஓர் ஆட்சியின் தலைவர் என்ற முறையில் - அவர் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்' என்று, ஆசியாவின் ஜோதி பிரதமர் பண்டித நேரு அவர்கள், தலைவர் காமராஜ் முதல்வர் பதவியேற்றதை நெஞ்சார வாழ்த்தினார்.