பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314. தேசியத் தலைவர் காமராஜர் எடின்பரோ கோமகன் பாராட்டு: இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் எலிசபெத் ராணியாரின் கணவன் எடின்பரோகோமகன், முதலமைச்சர்காமராஜ் அவர்களைப் பாராட்டிக் கைகுலுக்கி, 'மீண்டும் நான்சென்னைக்கு வரும்போது, நீங்கள் முதலமைச்சராக இருப்பீர்கள்' என்று ஆசி கூறியதற்கு ஏற்ப, தமிழகத்தின் முதலமைச்சராகக் காமராஜர் கோலோச்சினார்! நல்லவர்கள், தலைவர் காமராஜ் தமிழக முதல்வரானதை நாவார வாழ்த்தி வரவேற்றார்கள் வல்லவர்கள், அரசியலில் சறுக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கையோடு, அவருடைய சம்பவங்களைக் கவனித்து வந்தார்கள். இதனால், நாளடைவில் அவருக்கிருந்த அனுபவம், அவரது காந்த சக்தியின் ஈர்ப்பு சக்திபோல மக்களை ஈர்த்து மகிழவைத்தது. தெளிவான அரசியல் நோக்கும் செயலும், அவரைப் பிரதமர் நேரு பெருமான் பாதையிலே நடைபோடச் செய்தன. தன்னலமற்ற பாதையிலே காமராஜ் அவர்கள் காந்தியடிகளைப் போலத் தன்மானத்தோடு நடந்தார். ஆசையை அறுத்தார் நான், என்பதை நலியவைத்தார்: 'ஏழைகளுக்குத்தொண்டாற்றுவதே, தான்கொண்ட இலட்சியம் என்பதை மறவாமல், உறுதியை உருக்குலைத்திடாமல், அனைவரிடமும் மனம் விட்டுப் பேசும் போக்குகள், இவைகளின் கூட்டுச்சக்திதான்முதலமைச்சர்காமராஜ்' என்ற பெயரை, தலைவர் காமராஜ் உலகுக்கு உணர்த்தினார். எட்டுப்பேர் அமைச்சரவை! தலைவர் காமராஜ் அமைத்த, தமது முதல் அமைச்சரவையிலே சி.சுப்பிரமணியம், எம். பக்தவத்சலம், ஏ.பி. ஷெட்டி, எம்.ஏ. மாணிக்கவேலர், இராமநாதபுரம் ராஜா, எஸ்.எஸ். இராமசாமி படையாட்சி, பரமேஸ்வரன் ஆகிய எண்மர் அமைச்சர்களாக இருந்தனர். அவர்களில் பலர் அரசியல் துறையிலே அரும் பணியாற்றிய அட்டாவதானிகளே தாழ்த்தப்பட்ட பழங்குடியிலே தேர்தல் வெற்றி பெற்று வந்த பி. பரமேஸ்வரன் அவர்களுக்கு, அறநிலையத்துறையை அளித்தார். தமிழ்நாட்டின் எல்லாக் கோயில்களிலும் பூரணகும்பம் மரியாதைகளோடு அந்தந்த அறங்காவலர்கள் அவருக்கு