பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 31 5 வரவேற்பளிக்கும் படி செய்து மக்களிடையே ஹரிஜன சமத்துவத்தை உருவாக்கிய விடிவெள்ளியாகத் திகழ்ந்தார் காமராஜர். 1954-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டுவரை ஒன்பதாண்டு களாகத் தலைவர் காமராஜர் அவர்கள், தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில், அவர் சந்தித்த எந்தப் பிரச்னைகளுக்கும் மனம் கலங்காதவராக நற்பணியாற்றினார். எந்த ஒரு நல்ல காரியத்தையும் துணிச்சலுடன் செய்தார், நிதானமாகவும் பொறுமையுடனும், பொறுப்புடனும் மக்கட் பணிகளை அவர் ஆற்றினார். எதிர்க் கட்சிகளின் கருத்துகளை, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் எப்போதும் ஏளனம் செய்யாமல் கோபம் வரும் சம்பவங்களானாலும், அவற்றை விமரிசனம் செய்வது மிகவும் சாதுரியமாக நடந்து கொண்டார். தலைவர் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, ஒரு திட்டம் கொண்டு வந்தார். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரோடும் குறிப்பிட்ட ஒருநாளில் அவருடன் சென்று, அந்தந்தத் தொகுதி மக்களை நேரில் கண்டு, அங்குள்ள குறைகளை நேரிடையாகக் கேட்டு அறிந்து கொள்ளும் திட்டமே அந்தத் திட்டமாகும். மனுநீதி நாள் விழா காமராஜா - அனணா அவ்வாறு, தமிழக முதல்வரும் சட்டமன்ற உறுப்பினரும் அவரவர் தொகுதிக்குச் செல்லும்போது அரசு அதிகாரிகளும் அந்த விழாவிற்குச் சென்று கலந்து கொள்ளும் பழக்கத்தைத் தலைவர் காமராஜர் உருவாக்கினார். சட்டமன்ற உறுப்பினர், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் அனைவரும் மக்கள் குறைகளை எவ்வாறு அணுகுவது, தீர்ப்பது என்பதை அப்போதுகலந்துரையாடி முடிவெடுப்பார்கள். இதற்கு மனுநீதிநாள் விழா என்று பெயர். அந்தந்தத் தொகுதி மக்கள் குறைகளை அறிவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களின் தொகுதியான பாகல்மேடு என்ற ஒரு கிராமத்தை அரசு தேர்ந்தெடுத்து, அவ்வூரில் காமராஜர் அவர்களையும் கலந்துக்கொள்ளுமாறு அறிஞர் அண்ணா அழைத்தார். அண்ணா அவர்களும் முதல்வர்காமராஜர் அவர்களும் ஒன்றுகூடி, திரளாக வந்திருந்த அந்தத் தொகுதி மக்களின் குறைகளை நேரிலேயே கேட்டறிந்தார்கள்.