பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 தேசியத் தலைவர் காமராஜர் அந்தத் தொகுதி மக்களுக்குத் தேவையான பொதுவாக பயன்படக்கூடிய உடனடியான கோரிக்கைகள் அங்கு ஏதுமில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில், அதுவேண்டும் இதுவேண்டும்: என மக்கள் கேட்டார்கள். ஒரு சில பொதுவான தேவைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு அங்கேயே ஆணையிடப்பட்டது. அப்போது தலைவர்காமராஜ் அவர்கள். அதிகாரிகளிடம் அவர் பழகிய, நடந்து கொண்ட, கேட்ட கேள்விகளை எல்லாம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள், முதல்வர் காமராசரை மிகவும் பாராட்டினார். அன்று பகல் முதலமைச்சரும் - சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய இரு தரைவர்களும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் கலந்து கொண்டு, ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்டார்கள். அண்ணா அவர்களின் சட்டமன்றத் தொகுதியே அது எதிர்க் கட்சித் தலைவர் தொகுதியாயிற்றே என்று தலைவர் காமராஜ் எண்ணவில்லை. தான் முதலமைச்சர் என்பதால், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்.அவமதிக்கப்படவோ, மனம் புண்படவோ ஏதும் நடைபெறாதவாறு காமராஜர் கவனித்து நடந்து கொண்டார். தலைவர் காமராஜ் அவர்களது பண்பாட்டை, அவரது செயல்கள் எதிர்க்கட்சித்தலைவரான அறிஞர் அண்ணா அவர்களும் பாராட்டி மகிழுமாறு அவை விளங்கின. அரசியலில் ஜனநாயக மரபைக் காத்தவர் காமராஜ் அவர்கள் என்ற எண்ணம் மக்களிடம் மகிழ்ச்சியை மலரவைத்தது. காமராஜ் அதிகம் பேசமாட்டார்! மற்றவர் கருத்துக்களைக் கவனமாகக் கேட் பார். அரசியல் சிக்கல்கள், அவை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் வேறு எவ்வித சிக்கல்களும் தோன்றாதவாறு தீர்த்திட அவர் முடிவெடுப்பார். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஏழை மக்கள் உண்ண உணவிற்கும் - உடுக்க உடைக்கும் - குடியிருக்க வீட்டுக்கும் படும் பாட்டை ஆழ்ந்து அறிவார். அவற்றிற்கு உடனடியான ஆக்கப் பணிகளை காமராஜர் அவர்கள் புரிந்தார். பத்திரிகை நிருபரிடையே காட்டும் கனிவு! பத்திரிகை நிருபர்களைக் கண்டால், அவர் மிக அதிகமான பண்புடனும் - பாசத்துடனும் பழகுவார். பக்கத்திலேயே அவர்களை அமர வைப்பார் மரியாதை அதிகமாகக் காட்டுவார்.