பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 347 புகைப்படக்காரர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்று உபசரிப்பார். அவர்களும் ஏதாவது குறைகளைக் கூறினால், அவற்றை நிறைவுபடுத்தி மகிழவைக்கும் பண்பு காமராஜ் அவர்களிடம் இயற்கையாகவே இருந்தது. தலைவர் காமராஜரை யார் பார்க்க வந்தாலும், ஆளும்கட்சியானாலும் சரி, எதிர்க்கட்சிகளானாலும் சரி, அவர்கள் எவரிடமும் கோபப்படமாட்டார் - எரிச்சலடையவு மாட்டார். வந்த அவர்கள் கூறும் குறைகளைக் கேட்டபோதே உடன் நடவடிக்கை எடுக்குமாறு, அவர்கள் கண் முன்னாலேயே கொண்டுவந்த மனுவில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு எழுதித் துரித நடவடிக்கை எடுக்கச் சொல் வார். ஒருமுறை ஒருவரைப் பார்த்தாலே போதும். அவர் நாணயமானவரா இல்லை, மக்களை ஏமாற்றுபவரா என்று எடைபோடும் சக்தி பெற்றவர் தலைவர் காமராஜ். ஒருவர் தனது குறைகளைக் கூறிட தலைவரிடம் மனு கொண்டுவந்தால், அதைப் பெற்றுப் படிப்பார். கூறப்பட்டவை உண்மையா - பொய்யா? என்று சிறிது நேரம் சிந்திப்பார். எளிதில் அவரை ஏமாற்றி விடலாம் என்று எவராது எண்ணி வந்தால் - அவர்கள்தான் ஏமாந்து போவார்கள். ஒரு பிரச்சனை பற்றி யார் யாருக்குக் கடிதம் எழுத வேண்டுமோ அவரவர்களுக்கு எல்லாம் தவறாது எழுதிவிடும் பழக்கம் அவரிடம் இருந்தது. உடனுக்குடன் நடவடிக்கை எதையும் உடனுக்குடன் ஆராய்ந்து, அலசி, விரைந்து, முடிவு செய்யும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அதற்கான ஆதாரங்களையும் சுட்டிக் காட்டுவார் அரசுச் சான்றுகளைக் குறிப்பிடும் நினைவுச் சக்தியும் உண்டு. தலைவர் காமராஜ் அவர்களுக்கு முகஸ்துதி, அலங்காரப் படாடோபம், அவசியமற்ற விளம்பரங்கள் எவையும் பிடிக்காது. அவற்றை வெறுப்பார்! பொதுமக்கள் பிரச்னைகளில் கடுஞ்சொல், அனாவசியமான எரிச்சல், பிறர்மேல் காரணங்களில்லாமல் எரிந்துவிழும் சிறு சிறு சீற்றம் ஆகியவற்றை அவர் விரும்பாதவர். ஆனால், அரசியல் பிரச்னைகளில் மட்டும் அடிக்கடி சிறு சிறு கோபதாபங்கள் அவரிடம் மேடைகளிலே எதிரொலிப்பது உண்டு. இவ்வளவு பண்பாடுகளும் தலைவர் காமராஜரிடம் இருந்ததால்தான், முதலமைச்சர் பதவி அவரால் புகழ்பெற்றது. அவரும் அந்தப் பதவியினால் மரியாதை பெற்றார்;