பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 தேசியத் தலைவர் காமராஜர் மதிப்படைந்தார். அரசு அதிகாரிகள் எழுதிவைக்கும் கோப்புகளை நிதானமாகப் படிப்பது மட்டுமல்லாமல், எதிலும் வீணே சந்தேகப்படும் பழக்கமும் அவரிடம் இல்லை. காமராஜ் அவர்கள் எந்தப் பல்கலைக் கழகத்திலும் படிக்கவில்லை. என்றாலும், தமிழ் நாட்டிலுள்ள எல்லாப் பகுதிகளையும் அங்கு வாழுகின்ற மக்கள் என்ன தொழில்களைச் செய்கிறார்கள், அவர்களுக்கு என்னென்ன தேவைகள், என்பதையும் துல்லியமாக அறிந்து, அதற்கேற்ற எல்லா நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுப்பார். பயங்கரப்புயலா? மழைச் சீற்றத்தால் மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றார்களா? கிராமங்களைச் சுற்றி மழை வெள்ளச் சூழலா? அங்கே மார்பளவு வெள்ளமா? அதனையும் கடந்து சென்று மக்களுக்குச் சேவை செய்ய முடியுமா? என்றெல்லாம் அதிகாரிகளிடம் விசாரித்து, அங்கங்கே சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைப் போர்க்காலத் திட்டத்தின்படி ஆற்றுவார். அந்தத் தொண்டில் அவரே வல்லவர் என்பதையும் மக்களிடையே நிலைநாட்டினார்: காங்கிரஸ் கட்சிப் பணிகளுக்காகவும். அரசியல் நிகழ்ச்சிகளுக்காகவும் தமிழ்நாட்டைச் சுற்றிவரும்போதெல்லாம் எந்தெந்தப் பகுதிகளுக்கு என்னென்ன தேவைகள் என்ற திட்டத்தைக் காமராஜர் தெரிந்து கொண்டே வருவார். அந்தத் திட்டங்கள் எல்லாமே ஏழைகளுடைய வாழ் விற்காகவே அமைந்தனவாக இருக்கும். நிலச் சொந்தக்காரர்கள் ஏழை உழவர்களை மாற்றக் கூடாது என்ற சட்டமும் கொண்டு வந்தார் காமராஜ். இதனால் சமத்துவ சமுதாயம் உருவாக வழி செய்யப்பட்டது தமிழ் மாநில வளர்ச்சிக் குழு என்ற ஒன்றை முதல்வர்காமராஜ் உருவாக்கினார். இந்தக் குழுவில் அவருடைய அமைச்சர்கள் அனைவரும் இடம் பெற்றார்கள். பொருளாதாரத்தைச் சீர்படுத்தவும், புதிய திட்டங்களைப் பற்றிப் பரிசீலனை புரியவும் இந்தக் குழுவின் கூட்டங்கள் உதவின. ..i ابA:... یA.. بہن بجھتی۔ لیۓ غپھٹا۔ 史实 خAr, جس دrمn" -;\پ:۔