பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவை மொழிவழி மாநில வாரியாகப் பிரிப்பதற்குப் பதிலாக நாட்டை ஐந்தாறு பெரிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்ற திட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் திரு. பி.சி.ராய் கொண்டு வந்தார். தென்னிந்தியாவில் தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம் ஆகியவை அடங்கிய தட்சினப் பிரதேசம் என்ற ஒன்றை அமைக்கலாம் என்ற யோசனை அப்போது பலத்த விவாதத்திற்கு இடையே எழுந்தது. தலைவர்காமராஜ் அவர்கள், அந்ததட்சினப் பிரதேச திட்டத்தைப் பலமாக எதிர்த்தார். அப்போது தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களிடமிருந்து தலைவர் காமராஜ் அவர்களுக்கு ஒருதந்தி வந்தது. அந்தத்தந்தியில் பெரியார்.அவர்கள் தட்சினப் பிரதேசஅமைப்பைக் கடுமையாக எதிர்த்திருந்தார். தட்சிணப்பிரதேசம் அமைக்கப்பட்டால், கேரள, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், சென்னை மாநிலத்தின் தலைவர் காமராஜ் என்ற தலைமை நீங்கிவிடும் என்றும் முதல்வர்காமராஜர் அவர்களை அந்தத் தந்தியில் பெரியார் எச்சரித்திருந்தார். முதலமைச்சர் காமராஜர், தட்சினப் பிரதேசத் திட்டத்தை ஆதரிக்க மறுத்தார். அதைக் கண்ட பிரதமர் நேரு, காமராஜர் மீது அந்தத் திட்டத்தைத் திணிக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார். புதிய தமிழகம் கண்ட காமராஜ்! 1956ஆம் ஆண்டில், தற்போதுள்ள புதிய தமிழகம் தலைவர் காமராஜ் அவர்களால் உருவாயிற்று. தமிழ்நாட்டில், எல்லா அரசியல் பணிகளுக்கும் தமிழ்மொழிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று, முதலமைச்சர் காமராஜ் முடிவு செய்தார்.