பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32O தேசியத் தலைவர் காமராஜர் வயதானவர்களுக்கும் ஓப் ஆதியம் ஆதரவற்ற முதியோர்களுக்கு, அவர்கள் ஆணாக இருந்தாலும் சரி - பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களின் வயதான காலத்தில் ஒரளவு வறுமை குறைத்திட ஓய்வூதியம்’ என்ற பெயரால் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அமுல்படுத்தினார் புண்ணியவான் காமராஜர். காமராஜர் மதம், சாதி, கட்சி, நிறம், அரசியல் வித்தியாசம் ஏதுமின்றி, எல்லா ஏழை மாணவர்களும் கல்வி வசதிகளைப் பெற்றிட சரிசமமான சமத்துவ வசதிகள் செய்து கொடுத்தார். ஏழைப்பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம், ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அப்போதைய நிதிவசதிக் கேற்றபடியான அளவில் செய்து கொடுத்துக் கல்வி வளர்ச்சியை அது உருவாக்கியது. அதே திட்டத்தை முதலமைச்சர் காமராஜ் அவர்கள், தனது ஆட்சியின் வருவாய் நிதிநிலைக்கேற்றவாறு, மீண்டும் கொண்டு வந்தார். அதனால், குடிசை வாழ் குழந்தைகள் கல்வி பெற்றுக் குதூகலமாக இருக்க வழி கண்டார். சுதந்திரப் போராட்ட வீரர்களுடைய பிள்ளைகளை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் சேர்த்திட வருபவர்களுக்குத் தக்க உதவிகளைத் தலைவர் காமராஜ் செய்து தந்து, அந்தந்தக் கல்லூரிகளிலே சேர்த்திடவும் உதவினார்! தியாகிகளின் தேச சேவைக்குரிய மதிப்பையும்-மரியாதையையும் அவரது ஆட்சியில் உருவாக்கினார். விடுதலைப் போர்வீரர்களை ஒரு நாளும் அவர்மறந்ததில்லை. பொதுக் கூட்டத்தின் எந்த ஒரு மூலையிலே அவர்கள் அமர்ந்து இருந்தாலும் அவர்களைக் காமராஜர் பார்த்து விட்டால் போதும், உடனே அவர்கள் பெயர்களைக் கூறி அன்புடன் அழைத்து, தன்னருகே உட்கார வைத்து மரியாதையும் - அன்பும் காட்டும் முதலமைச்சராகத் திகழ்ந்தார் காமராஜர் அவர் மிகச் சிறந்த தேசாபிமானி என்பதற்கு வேறு சாட்சி வேண்டுமோ? மக்களுக்குத் தேவை அழகா? உணவா? மத்திய அரசு சென்னைத் துறைமுகத்தை விரிவுபடுத்திட விரும்பியது சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே உள்ள துறைமுகத்தை அடுத்துள்ள கடலோரப் பகுதி இடத்தில்