பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 321 துறைமுகத்தை விரிவுப்படுத்தினால் சென்னை மாநகரத்தின் அழகு கெட்டுவிடும். அதற்குப் பதிலாக இராயபுரம் பகுதியில் அதை விரிவுபடுத்தலாம் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் காமராஜ் கடிதம் எழுதினார். அதற்கு மத்திய அரசு, பாறைகள் நிறைந்த இராயபுரம் பகுதி யில் துறைமுகத்தை விரிவுபடுத்த முடியாது என்று கடிதம் எழுதி உங்களுக்கு வேண்டியது உணவா? அழகா "Do you want bread or beauty' என்ற வினாவை எழுப்பியது. உடனே முதலமைச்சர் காமராஜர், 'எனக்கு அழகைவிட உணவுதான் தேவை, "l want bread not beauty Graërps Logo ouangfigsrå. சமயோசிதமாக அவ்வாறு அவர் கடிதம் எழுதியதன் எதிரொலிதான் மத்திய அரசினரால் இன்றும் விரிவுபடுத்தப் பட்டு வரும் துறைமுகப்பகுதி என்பதை நாம் மறப்பதற்கில்லை. நிர்வாகத்தில் கண்டிப்பு! ஆளும் கட்சிக்காரர்களுக்கு, அரசு நிர்வாகத்தில் சலுகை காட்டினார் என்று - எதிர்க் கட்சிகள் குறை கூற முடியாதவாறு கண்டிப்புடன் நிர்வாகத்தை நடத்திக் காட்டினார் தலைவர் காமராஜ் பிற அமைச்சர்களுடைய நிர்வாகத்தில், முதலமைச்சர் என்ற தகுதியில் ஒருபோதும் தலைவர்காமராஜ் என்றும் தலையீடு செய்தது கிடையாது. தூக்குத் தண்டனை அடைந்த ஒரு குற்றவாளியின்கருணை மனு ஒன்றைப் பரிசீலனை செய்த அமைச்சர் எம். பக்தவத்சலம் அவர்கள், அதைஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறிவிட்டார். ஆனால், அப்போது இருந்த தமிழ் நாடு ஆளுநர் அவர்கள், பக்தவத்சலம் கருத்தை ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார். இது குறித்து முதலமைச்சரின் கருத்தை நாடிய ஆளுநர், தலைவர் காமராஜ் அவர்களிடம் பேசினார். அந்த மனுவின் மேலே இருந்த சட்ட நுணுக்கத்தை முதல்வர் காமராஜ் தெளிவாக உணர்ந்து ஆளுநர் கருத்துக்கு ஆதரவு தந்தார். நிர்வாகத்தின் நுட்பத்தைக் காமராஜ் நன்கு உணர்ந்தவர் என்பதற்கு இதைவிட வேறு சான்று என்ன வேண்டும்?