பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 தேசியத் தலைவர்காமராஜர் இராஜேந்திர பிரசாத் காமராஜருக்குப் பாராட்டு: காமராஜ் அவர்களது ஆட்சியின் கீழ் தமிழ் நாடு பலதுறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருப்பதை நான் பார்க்கிறேன். மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் பேசிய பேச்சு இது. போதாதா இது ஒன்றே தமிழ்நாட்டு ஆட்சியில் காமராஜ் நிர்வாகச் சிறப்பைப் பாராட்டிட: 'நாள் தோறும் நடைபெறும் அரசு நிர்வாகத்திலும் , திட்டங்கள் போன்ற பெரும்பணியிலும், ஊழல்கள் குறைந்து, திறமைகள் அதிகமாகக் காணப்படும் மாநிலம்" என்று இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டது, முதல்வர் காமராஜரின் தமிழ்நாட்டு ஆட்சியின் சிறப்பைப் பாராட்டியதையே குறிக்கும் அல்லவா? "ஆரம்பக் கல்வி, மின்சார விநியோகம் ஆகியவற்றில் பிற எந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழ் நாடு முன்னணியில் உள்ளது என்று, மத்திய சமுதாய நலத்திட்ட அமைச்சர்கே.சி. டே. குறிப்பிட்டது முதல்வர் காமராஜ் ஆட்சியின் மாண்பை அன்றோ 'உணவு உற்பத்தித் துறையில் தமிழ் நாடு தன்னிறைவு பெற்றுவிட்டது. இது என்றும் இல்லாத சாதனை” என்று, மத்திய துணை மந்திரியாக இருந்த எம்.வி. கிருஷ்ணப்பா பாராட்டியது முதலமைச்சர்காமராஜ் ஆட்சியைத்தான் இது தமிழ்நாட்டிற்குப் பெருமைதானே! காமராஜர் உருவச்சிலை தி.மு.க. மேயர் திறப்பு: சென்னை பெரியார் பாலம் அருகில், காஸ்மா பாலிடன் என்ற கிளப் எதிரில், தலைவர்காமராஜர் அவர்களது திருவுருவச்சிலைத் திறப்புவிழா, அன்றைய சென்னை மாநகராட்சி தி.மு.க. ஆட்சியில் மேயர் வி. முனிசாமி அவர்களால் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்த அந்த விழாவிலே, பாரதப் பிரதமர் நேரு அவர்கள், முதலமைச்சர் காமராஜ் உருவச்சிலையை 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் நாள் திறந்து வைத்து காமராஜ் அவர்களை அற்புதமாகப் பாராட்டி மகிழ்ந்தார்.