பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 323 அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டமும், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் “தலைவர்காமராஜ் வாழ்க, பிரதமர் நேரு வாழ்க’ என்று, மூவண்ணக் கொடிகளை ஏந்தியபடியே முழக்க மிட்டார்கள். பிரதமர் நேரு அவர்கள் கம்பீரமான காமராஜ் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துப் பேசும்போது, ' உண்மையான தலைவன் என்பதற்கு எடுத்துக் காட்டத்தக்கதோர் உதாரண புருஷன், மக்கள் மத்தியில் உருவான ஒரு தலைவன்; தான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பை நிறைவேற்றத் தக்க ஆற்றல் கொண்ட ஒரு தலைவன்; செயலில் தன்னை மறந்து ஈடுபட்ட நேர்மையான தலைவன் காமராஜர் சிலையைத் திறந்து வைக்கின்றேன். ' உயிரோடு இருப்பவர்களுக்குச் சிலைகள் அமைப்பதை நான் என்றும் விரும் புவதில்லை. மறைந்த பின்பு மரியாதை செலுத்துவதே ஏற்றது, மாண்பு என்று எண்ணுபவன் நான். 'ஆனால், காமராஜ் என் நண்பர் என்ற முறையிலும், அவர் மக்களிலிருந்து தோன்றிய ஒரு மகத்தான தலைவன் என்ற பெருமையிலும், அவருடைய உருவச் சிலையை நான் திறந்து வைத்திடச் சம்மதித்தேன்." என்று, உரையாற்றித் தலைவர் அவர்கள் சிலையைப் பெருமையோடு திறந்து வைத்தார். மக்கள் மகிழ்ச்சியினால் எழுப்பிய கையொலி அருகே இருந்த கடலொலியோடு போட்டியிட்டவாறு, காமராஜ் வாழ்க, பிரதமர் நேரு வாழ்க என்று எதிரொலித்தது. மக்களாட்சி எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, அன்று நடந்த மக்கள் தலைவர் காமராஜ் விழாவில் திரண்டிருந்த பொது மக்கள் கூட்டம் காமராஜர் மேல் தமிழகம் கொண்டிருந்த அன்பும் பாசமும் பக்தியும் எவ்வளவு என்பதற்கு ஒரு சான்றாகக் காட்சியளித்தது! காரணம் என்ன? ஆங்கிலேயன் ஆட்சியில், 100க்கு 7சதவிகித மக்கள்தான் கல்வி அறிவு பெற்றவர்கள். தலைவர்காமராஜ் ஆட்சியில் 100க்கு 70 பேர் கல்வி அறிவு பெற்றிருப்பதன் அடையாளமாகத்தான், மக்கள் அன்று தமது தலைவர் விழா என்பதை அறிந்து நன்றியுணர்ச்சி யோடு கூடினார்கள் வாழ்த்தினார்கள்! இராஜாஜி அவர்கள் ஆட்சியில், தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரம் பள்ளிகள்தான் நடந்தன. காமராஜ் ஆட்சியில், அவை 27 ஆயிரம் பள்ளிகளாக உயர்ந்தன. தமிழ் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் மின்சார விளக்குகள் அருட்ஜோதி ஒளிமயமாக