பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324. தேசியத் தலைவர் காமராஜர் விளங்கின. மின் இணைப்பற்ற கிராமங்கள் எங்கோ சிற்சில என்ற நிலையைத்தான் தமிழகம் அன்று பெற்றிருந்தது. சென்னையில் உள்ள கிண்டித் தொழிற்பேட்டை, அம்பத்துர், பாடி தொழிற் பேட்டைகள், இராணிப் பேட்டை என்ற பெயர்களோடு அமைந்த பேட்டைகள் அல்லாமல், மாவட்டந் தோறும் சிவகாசி, மதுரை, திருச்சி, நெல்லை, நகர்களில் பெரிய சிறிய தொழிற்பேட்டைகள் பெருகியதால் தொழில் வளர்ச்சிகள் சிறப்புற்றிருந்தன. இந்தத் தொழில்வளர்ச்சி மேன்மேலும் பெருகி வந்ததற்குக் காரணம், தலைவர் அமைச்சரவையில் தொழிலமைச்சரென உறுதுணையாயிருந்து பணியாற்றிய முன்னாள் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கட் ராமன் அவர்களும் ஆவார். காமராஜரின் கல்விப் புரட்சி! காமராஜ் அவர்கள் முதலமைச்சரானதும் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம் வேரோடு ஒழிந்தது. காமராஜரின் புதிய கல்விப் புரட்சித் திட்டம் உருவாயிற்று. ASAAAAS AAAAASAAAAS AAAAAS AAAAAS AAAAAS ఫ్లో