பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ1,காமராஜர் கல்விப் புரட்சி அறிவுத் துறை காணா அற்புதம்! கல்வி ஒரு சிலரின் ஏகபோக உரிமையாக இருந்ததை மாற்றி, அனைவருக்கும் கல்வி - முதியோருக்கும் கல்வி - எல்லோருக்கும் கல்வி ஏழைகளுக்கும் கல்வி என்ற கல்விப் புரட்சி தலைவர் காமராஜர் ஆட்சியிலே உருவாயிற்று! காமராஜ் அவர்களது ஆட்சியிலே கல்விஅமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் அவர்கள், கல்வி இயக்குநர்.என்.டி. சுந்தரவடிவேலு ஆகியோர் அரும்பாடுபட்டுக் கல்வித் துறையை உலகம் வியக்கும் அளவிற்கு மேம்படுத்தினார்கள் என்றால், அது ஏதோ கனவல்ல - இன்றைய நடைமுறை நனவாகவே நிலைத்து நிற்கின்றது. தமிழ் மாநிலம் முழுவதும், மாவட்டப் பாரபட்சமின்றிக் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. இராஜாஜி ஆட்சியிலே மூடப் பட்ட 6000 பள்ளிகளைக் காமராஜர் ஆட்சி திறந்து வைத்தது; அவற்றைக் கல்விக் கோட்டங்களாக்கியது. இந்தப் பள்ளிகளின் எண்ணிக்கையால் எல்லோருக்கும் கல்வி கொடுக்க இயலாது என்று எண்ணிய தலைவர், மேலும் 14 ஆயிரம் பள்ளிகளைத் திறந்திட ஆணையிட்டார். கல்விக்கண் திறந்தார் காமராஜர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை? வயது வந்தவர்களுக்கு எல்லாம் வாக்குரிமை அளிக்கும் பாரத நாட்டில் மக்கள் படிக்காமல் இருப்பது கேலிக் கூத்து அல்லவா? என்பதைத் தலைவர் காமராஜ் உணர்ந்தார்! காரணம் அவர் இளமையிலே கல்வி பெறமுடியாத சூழ்நிலை இருந்ததால் முதல் ஐந்தாண்டுக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் காமராஜர் 21,500 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்தார். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், மேலும் 26,750 பள்ளிக் கூடங்களாக அவை பெருகின. அதற்குப் பிறகு, அவை 30 ஆயிரத்தை எட்டி விட்டன. இவை புதிய பள்ளிகளின் எண்ணிக்கை; இதைவிட வேறு என்ன சிறந்த கல்வித் தொண்டு வேண்டும்? யார் செய்தார் இவரைப் போல என்றும் இதைவிட?