பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 தேசியத் தலைவர் காமராஜர் முதல் திட்டக் காலத்தில், ஆரம்பப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் எண்ணிக்கை, 25 இலட்சமாக இருந்தது. இரண்டாவது திட்ட இறுதியில், இந்த அளவு 33 இலட்சமாக மாறிற்று. பின்னர், 41 இலட்சமாக உயர்ந்தது. இதைப் போல எந்த ஆட்சி செய்தது? இருந்தால் கூறுங்கள் அன்று வரையுள்ள கல்வி வரலாற்றில்! மூன்றாவது திட்டக் காலத்தில், மேலும் 14 இலட்சம் சிறுவர்களைப் பள்ளிகளில் சேர்த்திடத் திட்டம் உருவாயிற்று! ஆனால், 1962-53ஆம் ஆண்டுகளுக்கு முன்பே, 12.3 லட்சம் பேர் பள்ளியில் சேர்ந்து விடுவார்கள் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. பசித்த வயிறுகளோடு ஏழைப் பிள்ளைகள் பள்ளிக்கு வரமுடியாத நிலையுள்ளதைத் தலைவர் காமராஜர் நன்கு உணர்ந்தார்: படிப்பறிவின் அருமையை உணராத பாமர மக்களின் வறுமைச் சூழ்நிலையும் அவர் அறிந்த ஒன்று. அதனால், மாநிலம் முழுவதுமுள்ள கிராமங்களில் எல்லாம், அதே நேரத்தில் எல்லா நகரப் பள்ளிக் கூடங்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வர காமராஜ் அவர்கள் சிந்தித்தார். இந்தத் திட்டம் நல்ல பயன்தர ஆரம்பித்த பிறகு, கிராமங்கள் தோறும் ஆரம்பப் பள்ளிகளைக் கட்டாயமாகத் திறந்து கல்வியைப் பரப்பிடும் நிலை ஏற்பட்டது. இதனால், தமிழகத்திலே உள்ள இலட்சக் கணக்கான சிறுவர் சிறுமியர்கள் ஆரம்பப் பள்ளிகளிலே சேர்ந்து கல்வி கற்றிடும் ஏற்றம் அமைந்தது; கிராமம் தோறும் கல்வி வளர்ச்சியைப் பற்றிய அருமை - பெருமைகளை விளக்கிப் பொதுமக்களிடையே பிரசாரம் புரிந்திடக் கல்விக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதனால், பள்ளிகளுக்கு மேலும் சிறுவர் - சிறுமியர்கள் புதியதாக வந்து சேர்ந்து கல்விப் பயிற்சி பெறும் நிலை வளர்ந்தது. இப்படிப்பட்ட கல்விக் குழுக்களைக் கிராமங்கள் தோறும் அமைத்துக் கல்விப் பிரசாரம் புரிந்த செப்தி வரலாற்றில் எங்கேனும் உண்டா? இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி - இரண்டும் இருந்தும், அங்கங்கே வாழும் எல்லாக் குழந்தைகளும் திரண்டு வந்து படிக்கும் நிலை ஏற்படவில்லையே ஏன்? என்று காமராஜர் சிந்தித்தார்: அதற்காக அவர், தமிழ் நாட்டில் இடைவிடாச் சுற்றுப் பயணம் செய்தபோதெல்லாம், ஆங்காங்கே உள்ள கிராம மக்களையும் ஊர்ப் பெரியவர்களையும் ஒன்று கூட்டி, அவரவர் வறுமை, குடும்ப வாழ்க்கை காரண - காரியங்களை அறிந்து,