பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 19 1932-ஆம் ஆண்டில் அலகாபாத் நகரில் ஒரு சர்வ கட்சிக் கூட்டத்தைத் தலைமை வகித்து நடத்திக் காட்டினார் அவ்வாச்சாரியார் சைமன் கமிஷன் இந்தியா வருவதை எதிர்த்து 1929-ஆம் ஆண்டில் போராட்டமும் நடத்தினார்: கைதான முதல் தமிழரும் அவரே! இத்தகைய நாகபுரி - மகாசபை தலைவர் விஜயராகவாச்சாரி யாருக்கு 1935-ஆம் ஆண்டில் பொன்விழா கொண்டாடப்பட்டது! இதே ஆண்டில்தான், இந்திய தேசியக் காங்கிரஸ் மகாசபைக்கும் பொன்விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அவரும் கலந்து களி கொண்டார்: மதுவிலக்கு, நிலச் சீர்திருத்தம், சிறைச் சீர்திருத்தம் போன்ற திட்டங்களைக் காந்திய லட்சியங்களுடன் இணைத்த பெருமை இந்த சி. வி. ஆச்சாரியாருக்கு உண்டு இந்தியாவிற்குரிய விடுதலையைப் பெற்றுத்தர வேண்டும் என்று முதன் முறையாக சர்வதேச சங்கத்தில் முழக்கமிட்ட முதல் தமிழரும் இதே சேலம் திரு.சி.விஜயராகவாச்சாரியார் தான் குழந்தை திருமண எதிர்ப்பு, பெண்களுக்குச் சொத்துரிமை, தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்திய முதல் தமிழர் இவர்! 'நீதிக்காகப் போராடுவேன், இந்தியாவிற்கு விடுதலை தேவை; சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று திலகர் அரசியல் தத்துவத்தை ஏற்றுப் போராடியபோது, கைது செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற தியாகப் புகழுக்கும் இவர் உரியவர்: --- தமிழகத்திற்குக் காந்தியடிகள் வருகை தந்தபோது, அவர் கலந்து கொண்ட எல்லாக் கூட்டங்களுக்கும் தலைமை வகிக்கும் தகுதிபெற்ற ஒரே தலைவராக திரு.சி.விஜயராகவாச்சாரியார் விளங்கி உரையாற்றினார் நாகபுரியில் நடைபெற்ற அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை வகித்த முதல் தமிழரான சேலம் திரு சி. விஜயராகவாச்சாரியார், 1994-ம் ஆண்டு மறைந்தார்: இத்தகைய அரிய சேவைகளைச் செய்த விஜயராகவாச்சாரியார் நினைவாக அவர் பெயரால் சேலத்தில் சிறிய ஒரு நூலகம் ஒன்று தற்போது நடந்து வருகின்றது! இதுதான் அவர் தொண்டுக்குக் கிடைத்த பெரிய அரிய மரியாதை உண்மைக்குக் காலமில்லாத நாடு என்று உணருமோ அவருடைய தமிழாற்றலை? என்று உணருமோ அவர் ஆற்றிய பெருந்தொண்டுகளை?