பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 327 அவை நீங்குவதற்கான திட்டங்களைத் தீட்டினார்; செயலாற்றினார்! வறுமையால் எலும்புத் தோலுமாய்க் காட்சி தரும் சிறுவர் - சிறுமியர் உடற் தோற்றங்கள், ஒளியில்லாத கண்கள், பரட்டைத்தலைகள், எண்ணெய் தடவிக்கூடத்தலைவார முடியாத தரித்திர நிலைகள், உடுக்க உடைகளற்ற நிர்வானமாய் அலையும் பிள்ளைகள், சில கோவானான்டிச் சிறுவர்களின் பரிதாபங்கள், ஒதுங்கி வாழ்ந்திடக் குடிசை ஒன்றில்லாமல் வீதியோரங்களில் மக்கள் வாழ்ந்திடும் அவலங்கள், வயிறாரக் குடித்திட ஒருவேளைக் கஞ்சி கூடக் கிடைக்கா வறுமைக் கோரங்கள்- அனைத்தையும் தன்கண்ணாரக்கண்டுகண்டு கவலை மிகக் கொண்டார். இத்தகைய வாழ்க்கைச் சூழ்நிலையுடையவர்கள், எப்படித் தங்களது குழந்தைகளைக் கல்வி கற்றிடப் பள்ளிகளுக்கு அனுப்புவார்கள்? என்று எண்ணி வேதனைப் பட்டார்; அதனால்தான், அவர் ஏழை பங்காளராகக் காட்சி தந்தார்: விருது நகர் பிடி அரிசிப் பள்ளி மதிய உணவு முன்னோடி! அந்த நேரத்தில்தான், சிறுவயதில், விருதுநகரில், காமராஜ் கல்வி கற்றபோது பள்ளியில் நிகழ்ந்த படியரிசித் திட்டம் அவர் மனக்கண்ணில் நிழலாடியது! கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம், கல்வி இயக்குநர் என்.டி. சுந்தர வடிவேலு, பிற அதிகாரிகள் நிபுணர்களுடன் கூடி மதிய உணவு பற்றிய திட்டத்தை விவாதித்தார். படிக்கும் பிள்ளைகளுக்கு ஒருவேளை ஒழுங்காக உணவளித்தால், பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பிக் கல்வி கற்கச் செய்ய, ஏழைப் பெற்றோர்களுக்கு ஆசை வராதா? என்று தலைவர் அவர்களிடையே வாதத்தை வைத்தார். அதன் எதிரொலிதான், இலவச மதிய உணவுத் திட்டம். இந்தத் திட்டத்தை, நீதிக் கட்சி தமிழகத்தை ஆண்டபோது வழங்கிய காட்சியை அவரது சிந்தனைக்கு அதிகாரிகள் நினைவுறுத்தினார்கள் நீதிக் கட்சியினர் அவர்களுடைய நிதி நிலைக்கேற்றபடி செய்தார்கள். நாம், நமது நிதிநிலைக்கேற்ப அதனை விரிவுபடுத்தலாமே ஏழைக் குழந்தைகள் கல்விக் கண் வாயிலாக ஒளி பெறுவார்களே! வறுமையில் வாடிடும் ஏழைப் பெற்றோர்களின் தரித்திரத்தைப் போக்கினால் அவர்களது மனமும் மகிழுமே!வு என்ற எண்ணங்களால் மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்திடக் காமராஜர்ஆணையிட்டார்.