பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 தேசியத் தலைவர் காமராஜர் 1956ஆம் ஆண்டில் இலவச மதிய உணவுத் திட்டம் முறையாக ஆரம்பிக்கப்பட்டு, பலனும் அளித்தது. இதற்கு முன்பு மக்களே ஏற்று நடத்துவதாக இருந்த இந்தத் திட்டம், அரசு உதவி கிடைத்தவுடன், அது மேலும் வலுப்பெற்று ஒழுங்காகவே நடந்தது. உலக நாடுகளின் பாராட்டுக்கள்! தலைவர் காமராஜ் அவர்களால் கல்வி வளர்ச்சிக்காகத் துவக்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் வெற்றியைக் கண்டு, உலக நாடுகள் பாராட்டின வரவேற்று வாழ்த்தின! அமெரிக்காவிலும் இந்தத் திட்டத்தை உருவாக்கப் போவதாக ஒர் அமெரிக்க அறிஞர்அறிக்கை விடுத்து மகிழ்ந்தார். பிரதமர் நேரு அவர்கள், ஏழ்மையின் கோரப் பிடியைக் குறைத்து, கிராம மக்களின் மனதிலே மகிழ்வையூட்டிடும் இந்தத் திட்டத்தைக் கண்டு உளம் பூரித்தார் பாராட்டினார்: இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திற்குள், தமிழ்நாட்டின் பெரும்பகுதிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் பரவியது. பலன் பெற்றார்கள் ஏழைச் சிறுவர் சிறுமியர்கள் எல்லாம்! மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், மதிய உணவுத் திட்டம் தீவிரமடைந்ததால், மேலும் 14 லட்சம் சிறுவர்கள் அதனால் பயனடைந்தார்கள். அமெரிக்காவின் பாராட்டு - உதவி! அமெரிக்க கேர்நிறுவனம் இந்தத் திட்டத்திற்கு, பால் பவுடர், சோளமாவு, தாவர எண்ணெய் ஆகிய பொருட்களை இலவசமாகக் கொடுத்து உதவியது. ஈராயிரம் ஆண்டு காணாத சாதனைகள்! கல்வி வளர்ச்சியில் தீவிரமான சிந்தனை கொண்ட தலைவர் காமராஜ், மக்களின் ஆர்வத்தை மேலும் தீவிரப்படுத்திட முயன்றார். ஏனென்றால், தம் ஆட்சி எடுத்து வருகின்ற திட்டங்களிலே எல்லாம், மக்கள் போதிய ஆர்வமும் அக்கறையும் காட்டவில்லையே என்ற வேதனையும் கவலையும் அவரை அதிகமாக வருத்தியன தமிழ்நாட்டு வரலாற்றில், ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளாக நடைபெறாத ஒரு சமுதாய, அற்புதத்தைக் காமராஜ் அவர்கள் தமது