பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 329 வரலாற்றிலே அதை ஒரு மாபெரும் புரட்சி இயக்கமாகவே தோற்றுவித்து இயக்கி வளர்த்து வந்தார் எனலாம்! ஆசிரியர்களுக்கு ஆற்றிய தொண்டு! காமராஜர் புதிய புதிய பள்ளிக் கூடங்களைத் திறந்தார்: மதிய உணவை ஏழைச் சிறுவர்களுக்குப் படைத்தார்! கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளிக் கூடங்களுக்கான ஆசிரியப் பெருமக்களை அரசுச் சார்பாக நியமித்தார் ஆசிரியர்களுக்குரிய சம்பளத்தை உயர்த்தி அவர்களையும் அகமகிழச் செய்தார்: அவர்களுடைய பிள்ளைகளும் உயர் கல்வி வரை இலவசமாகக் கற்றிடத் திட்டமிட்டு அதை நடைமுறைப்படுத்தினார்: பொது மக்களிடையே கல்வியின் சிறப்புக்களை உணர்த்திட, கிராமங்கள் தோறும் கல்விக் குழுக்களை அமைத்தார் ஏழை மாணவர்களுக்கு இலவசச் சீருடை, இலவச எழுது பொருட்கள், படிக்கப் புத்தகங்கள், எழுதக் குறிப்புப் புத்தகங்கள் போன்றவற்றை வழங்கிட காமராஜர் வழி வகுத்தார். கிராமங்களில் கல்வியைத் தட்டி எழுப்பிய அக்கறை: 'அரசு ஏதோ இந்தக் கல்விப் பணியை ஆற்றுகின்றது! அது அதன்கடமை பொறுப்பு!" என்ற எண்ணம் பொதுமக்களிடையே இருந்ததே தவிர, அந்தத் திட்டங்களிலே மக்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை - என்ற நிலை நாட்டிலே இருந்ததைத் தலைவர் காமராஜர் கண்டார். அந்த நிலையை அகற்றி, மக்களும் இந்தத் திட்டங்களிலே ஒத்துழைத்து ஒன்று பட்டுக் கலந்து பணியாற்றிடும் மிகப் பெரிய பொறுப்பை அவர் பொதுமக்களிடையே உருவாக்கினார். குறிப்பாகக் கிராமங்களைத் தட்டி எழுப்பிக் கல்வி ஒளிபெற்றிடத் தயார் படுத்தினார் - காமராஜர் 'கல்வி வழங்குவது என் பொறுப்பு: கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும் என்ற உணர்ச்சி ஒவ்வொரு குடி மகனுக்கும் ஏற்பட வேண்டாமா? அவ்வாறு ஏற்படுவதுதான் உண்மையான கல்விவளர்ச்சித் திட்டம்! பள்ளி மாநாடுகள் ரூ.647 கோடி வசூல்! அதனால், தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமங்கள், நகரங்கள் உட்பட்ட இடங்களிலே எல்லாம் அதிகாரிகளாலும் - மக்களாலும்