பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 தேசியத் தலைவர் காமராஜர் பள்ளிக் கல்வி வளர்ச்சி இயக்க மாநாடுகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் 133 மாநாடுகள் ஆங்காங்கே நடத்தப்பட்டன. இவ்வாறு நடந்த மாநாடுகளின் பலனாக 647 கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள், கல்வி வளர்ச்சிப் பணிகளுக்காக மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டன. தலைவர் காமராஜ் அவர்களிடம், நேரிடையாக மட்டும் 4 கோடி ரூபாயைப் பொதுமக்கள் வழங்கினார்கள். புதுமையான இந்தக் கல்விப் புரட்சித் திட்டத்தைப் பார்த்துப் பூரித்துப் புளகாங்கிதமுற்ற உலக நாடுகள், தலைவர்காமராஜரை மிகவும் பாராட்டி வாழ்த்தின. சீருடைச் சிறப்புக்கள் மாணவர்கள் கல்விக் கோட்டத்திற்குச் செல்லும்போது, ஒழுங்காகவும் -ஒழுக்கமாகவும் அழகாகவும் செல்லவேண்டாமா? அவர்களுக்குப் பள்ளியில் எல்லாப் பொருட்களும் கிடைக்க வேண்டும் அல்லவா? இதற்காக மாணவர்கள் அழகாகத் தோற்றமளிக்கச் சீருடைகள், இலவசப் புத்தகங்கள், எழுது பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள், போன்ற எல்லாம் லட்சக்கணக்கான பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளிப்பாலகர்கள்மத்தியில், ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிடும் ஏழை- பணக்காரன் என்ற பேதங்கள் எழக்கூடாதே என்று முதல்வர் காமராஜர் எண்ணினார். அதன் எதிரொலிதான், எல்லாப் பிள்ளைகளும் ஒரே விதமான பள்ளிச் சீருடைகளை அணிவது என்ற திட்டமாகும். இந்த அரிய செயலால், பள்ளிப் பிள்ளைகளிடையே தாழ்வு உணர்ச்சிகள் ஏற்றத் தோன்றாத நிலையை உருவாக்கினார் காமராஜர் அவர்கள். இன்றும் கூட, அரசுப் பள்ளிகளானாலும் சரி - தனியார் கல்விக் கூடங்களானாலும் சரி, பிள்ளைகள் எல்லாம் ஒரே மாதிரியான சீருடைகளை அணிந்து, அழகு தவழும் கோலத்தோடு அணியணியாகச் செல்லும் அற்புதக் காட்சிகளைக் காண்கின்றோம் அல்லவா? அந்த அதிசயக் காட்சியை மாணவ மணிகளிடையே உருவாக்கியவர் தலைவர் காமராஜ் அவர்கள் தானே! அதற்கான ஆணைகளை இட்டவரும் அந்த அற்புதப் பெருமகனன்றோ!