பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 331 11-வது வகுப்பு வரை கல்வி இலவசம்! 1960 ஆம் ஆண்டில், ஏழைப் பிள்ளைகள் எல்லாருக்கும் 11ஆவது வகுப் புவரை இலவசக்கல்வி வழங்கிடக் காமராஜர் கட்டளை யிட்டார். இந்தச் சட்டம், முதலில் 1200 ரூபாய் ஆண்டு வருமானத்திற்குக் குறைந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்குத் தான் பொருந்தும் என்றார். பிறகு, மீண்டும் இந்தச் சட்டத்தைத் திருத்தி, 1500 ரூபாய் ஆண்டு வருமானமுள்ள எல்லா ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகட்கும் அமுல்படுத்தப்படும்' என்று நிபந்தனையைத் தலைவர் தளர்த்தினார்: இதே சட்டத்தின் வாயிலாகக் கெசட் பதிவு பெறாத அரசு ஊழியர்கள், ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகளின் ஊழியர் பிள்ளைகட்கும் உயர்நிலைக் கல்வியைச்சம்பளம் கட்டாமல் பெற்றிடக் காமராஜர் உத்தரவிட்டார். 1956-57 ஆம் ஆண்டிலிருந்தே, ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள், கடைநிலை அரசுப் பணியாளர்கள் ஆகிய அனைவரின் பிள்ளைகளுக்கும் சம்பளமில்லாத உயர்நிலைக் கல்விச்சலுகைகள் வழங்கப்பட்டன. எல்லாருக்கும் இலவசக் கல்வி! இதற்குப் பிறகு, அடுத்த ஆண்டில், உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்கும் மாணவ மாணவியரில் - இலவசக் கல்வி பெறாமல் மீதியுள்ளவர்கள், 100க்கு 17பேர்தான் என்று அரசு கணக்கிட்டதால், அவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்துடன், எல்லாருக்குமே இலவசக் கல்வி என்ற திட்டம் 1952-ஆம் ஆண்டில் அமுலானது. அல்லும் - பகலும் அயராது, சிந்தித்த தலைவர் காமராஜ் சிந்தனை ஆற்றலால், தமிழகத்தில் ஆரம்பப் பள்ளியே இல்லாத கிராமம் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஐந்து மைல் துரத்திற்கு ஒர் உயர்நிலைப் பள்ளி வீதம், தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகள் உருவாக்கப் பட்டு, அவை நவீன வசதிகளுடன் அமைந்தன. கல்விக்கண் தந்த 'கண்ணப்பர் காமராஜர்! தமிழகக் கிராமங்களிலே எல்லாம், ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் பெருகிக் கல்வி