பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 தேசியத் தலைவர் காமராஜர் மணம் பரப்பியது. தமிழ் மக்கள் எல்லாரும் முதலமைச்சர் காமராஜ் அவர்களின் கல்வி வளர்ச்சிக்குரிய தொண்டுகளைக் கண்டு பெருமிதம் அடைந்தார்கள். கல்விக்கண் தந்த காமராஜர் என்று அவரைப் போற்றி மகிழ்ந்தார்கள். நாட்டில் பள்ளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டால் மட்டும் போதுமா? கல்வியின் தரத்தைப் பாதுகாக்க வேண்டாமா? அதற்கான நடவடிக்கைகளையும் காமராஜ் உடனடியாக எடுத்தார். கல்வியின் தகுதியை உயர்த்திட, எல்லா ஆசிரியப் பெருமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஆசிரியர்கள் ஆண்டுக்கு 180 நாட்களே பள்ளிகளில் பணியாற்றினார்கள். அந்தப் பணி நாட்களைக் காமராஜர் 200 என்று உயர்த்தினார். தேவையற்ற விடுமுறை நாட்களை அவர் குறைத்தார். பாடத்திட்டங்கள், பலவிதத் திறமைகளை மாணவரிடையே உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டன. அதனால் இருகூறு வகுப்புக்கள் துவங்கப்பட்டன. இதனடிப் படையிலேயே பலநோக்குப் பள்ளிகள் ஆரம்பமாயின. பலநோக்குப் பள்ளிகள் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், 191 பலநோக்குப் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன. 236 இரு கூறு வகுப்புக்கள் தொடங்கப்பட்டன. அறிவியல் பாடங்களைக்கற்றிட, தேவையான புதிய புதிய இரசாயனப் பரிசோதனைக்கூடங்களும் அதற்குரிய நவீனக் கருவிகளும் - அதற்கான அறிவியல் அறிவைப் பெற்றிட புதிய நூல் நிலையங்களும் உருவாகின. ஆசிரியர்கள் ஒப்ஆதியம்! கல்வித் தரம் உயர்த்தப்பட்ட நிலைகளுக்கு ஏற்றவாறு, ஆசிரியர்பெருமக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடசம்பள உயர்வுகளை அவ்வப்போது குழு அமைத்துக் கணித்து நிதிநிலை அறிக்கைகளைச்சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டபோது தலைவர் காமராஜ் அவற்றை உயர்த்தினார். ஆசிரியர் பெருமக்களுக்கு, அன்றுவரை இல் லாதிருந்த ஓய்வூதியம், பிராவிடண்ட் ஃபண்டு, கட்டாய இன்சூரன்ஸ், ஆகிய முப்பெரும் திட்டங்களையும் அவர் அமுலாக்கினார்.