பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 333 அவர்களுக்குரிய குடும்ப ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டங்களை முதன்முதலில் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த பெருமையும் புகழும் தலைவர் காமராஜ் அவர்களுக்கே என்றென்றும் உண்டு. கிராமங்களில் பணியாற்றிடும் ஆசிரியர்களுக்கு அரசாங்கமே வீடு கட்டிக் கொடுக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது. மூன்றாவது திட்டக் காலத்தில், 25 லட்சம் ரூபாய் இதற்காக ஒதுக்கி, 750 வீடுகளைக் கட்டி முடித்து அவர் வழங்கினார். கல்லூரிக் கல்வி வட்டியற்ற கடன்! மருத்துவக் கல்லூரி, இன்ஜீனியரிங் கல்லூரி, விவசாயக் கல்லூரி, தொழிற் கல்லூரிகளில் கல்வி கற்றிடும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாத கடன் உதவியளிக்கத் தலைவர் காமராஜ் ஏற்பாடு செய்தார். இதனால், ஆண்டு தோறும் மாணவர்கள் எண்ணிக்கை அக் கல்லூரிகளில் பெருகியது. மருத்துவ மனைகளில் பணியாற்றிடும் நர்சுகளுக்குரிய பயிற்சி வசதிகளும் சம்பள உயர்வுகளும் அவர் ஆட்சியில் உயர்ந்தன. முதல் வர் காமராஜ் ஆட்சியில் தான் கலைக் கல்லூரிகள் அதிகமாக உருவாக்கப்பட்டன. அவருடைய அரசில் இரண்டு உடற்பயிற்சிக் கல்லூரிகளும், 39 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், பல்கலைக்கழகம் ஒன்றும் உருவாயின. 获 ံို ఫ్ల 获