பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઉ2છે பசுமைப் புரட்சி வித்தகர்! ழர் காமராஜர்! பச்சைத் தய தலைவர் காமராஜர் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு, தமிழகம் பெற்ற மிகச் சிறந்த கல்வித் தொண்டுகளையும், தமிழ் மக்கள்பால் அவர் வைத்துள்ள அன்பால் ஆற்றும் இனத்தொண்டுகளையும், தந்தை பெரியார் ஈ.வெ. ரா. அவர்கள் நுட்பமாகக் கவனித்துக் கொண்டே வந்தார்: பச்சைத் தமிழர் பெரியார் பாராட்டு! அதனால்தான் தட்சினப் பிரதேசம் என்ற ஒன்றை வடவர்கள் கொண்டு வந்தபோது, தலைவர் காமராஜ் தலைமை நீங்கிவிடும், தமிழர்கள் அடிமைகளாகி விடுவர் என்ற கருத்தை, தலைவர் காமராஜருக்குத்தந்தி வாயிலாக அவர் அன்று அறிவித்தார். அதைக் காமராஜ் அவர்களும் ஏற்றார் வெற்றிக்கரமாக அதை முடித்தார். ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்றிட வேண்டும் என்ற காமராஜருடைய அக்கறையான பணிகளையும் - ஆர்வத்தையும் - அதற்கான செயலாற்றல்களையும் கண்ட தந்தை பெரியார் அவர்கள், தானாக முன்வந்து மனம் திறந்து பச்சைத் தமிழர் காமராஜர் என்று பாராட்டி மகிழ்ந்தார். அதே நேரத்தில் அவரது ஆட்சிக்கு எவராலும்; எந்தவிதத் தடையும் ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாதே என்ற அக்கறையால், காமராஜர் எதிர்பாராதபோதே தந்தை பெரியார் அவர்கள் தனது கட்சியான திராவிடர் கழகத்தின் ஆதரவை வலிய வழங்கி வந்தார்! தந்தை பெரியார் அவர்கள், தான் பேசிடும் தனது கட்சிப் பொதுக்கூட்டங்களின் மேடைதோறும் பச்சைத் தமிழர் காமராஜ் அவர்களின் தொண்டுகளை - உதாரணங்களுடன் எடுத்துக் காட்டி, மக்களிடையே புகழ்ந்தார்; போற்றினார். காமராஜரைத் தமிழர்கள் இந்த நேரத்தில் ஆதரிக்காவிட்டால் நாம் ஒரு நூற்றாண்டின் வளர்ச்சி வாழ்க்கை நிலைகளை இழப்போம் என்று கணித்துப் பாராட்டினார்.