பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 335 தந்தை பெரியார்ஈ.வெ. ரா. முதல்வர்காமராஜ் ஆகியோரிடையே உள்ள அரசியல் தொடர்புகளையும் - நெருக்கங்களையும் கண்ட சில நடுநிலையாளர்கள், அவரவர் எண்ணங்களைத் தகுதிமிக்கவர்களின் பரிந்துரைகளோடு பெரியார்.அவர்களிடம் கூறி, அவற்றைத்தலைவர் காமராஜ் மூலமாக பிராமணரல்லாதார்வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். தமிழர் ஏணி தந்தை பெரியார்? ஒர் உயர் அரசு அதிகாரி எல்லாத் தகுதிகளும் உடையவராக இருந்தும் அவர் முற்பட்ட வகுப்பினரை மீறிப் பதவி பெற முடியாதவராக மனம் நைந்து உழைப்பார். இதைப் பெரியார் அவர்களுக்கு தகுதியுடையவர்கள் எடுத்துக் கூறுவார்கள். பெரியார் அவர்கள் இந்த இழிநிலையைத் தலைவர் காமராஜரிடம் விளக்கிக் கூறினால், நியாயமாகப் பெறவேண்டிய உயர் பதவியைப் பெற்றுத் தருவார்காமராஜர் ஆணையுமிடுவார்: சில நேரங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்களும் பெரியார் அவர்களைச் சென்று பார்த்துத் தங்களது பணிநிலைகளை எடுத்துச் சொல்வார்கள். தலைவர் காமராஜரிடம் இப்படிப்பட்ட உண்மை நிலைகளைப் பெரியார் அவர்கள் தொலைபேசி மூலமாகக் கூறி, அதற்குரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, தகுதிக்கேற்ற உதவிகளைச் செய்ய வைப்பதும் உண்டு-தமிழின வளர்ச்சிக்காக! இதுபோன்ற சம்பவங்களைத் தலைவர் காமராஜ் அவர்களிடம் பெரியார் அவர்கள் தெரிவித்தவுடன், அவருடைய வார்த்தையில் நியாயம் நிலைக்கும் எதையும் அவர்தவறாகக் கூறமாட்டார் என்று தலைவர் காமராஜ் நம்புவார். எப்படியும் தமிழ் இன வாழ்வு உயர வேண்டும் என்று கருதி, அப்போதே அதற்கேற்ற உத்திரவுகளைக் காமராஜர் பிறப்பிப்பார். அதனால், தமிழர்களுக்கு வாழ்வு கொடுக்கும் பச்சைத் தமிழர் காமராஜர் என்று தந்தை பெரியார் அவர்கள், தனது கட்சி மேடைகளிலே பகிரங்கமாகவே முதல்வர் காமராஜரைப் பாராட்டி மகிழ்வார் - பிரசாரமும் செய்வார். ஈ.வெ.கி. சுலோசனா சம்பத் அவர்களது சகோதரர் எஸ். கஜேந்திரன் என்பவர், மறைந்த ஈ.வி.கே. சம்பத் அவர்களின் மைத்துனர் ஆவார். செய்தித் துறையிலே அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். திராவிடர் இயக்க ஈடுபாடுடைய ஆர்வலர் விசுவாசி எஸ். கஜேந்திரன்.