பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 தேசியத் தலைவர் காமராஜர் செய்தித் துறையில் அவர் பணியாற்றியதால், சில அரசு இரகசியங்களையும், முக்கியமான தகவல்களையும் திராவிட இயக்கத் தலைவர்களுக்குக் கொடுக்கிறார் என்ற ஐயம், காமராஜ் ஆட்சி நடைபெறும்போது அவர் மீது உருவாயிற்று! காவல்துறை அவரைக் கண்காணித்ததன் எதிரொலி, அவரைப் பணியை விட்டு நீக்கிவிடலாம் என்று கூறப்பட்டு, அவருடைய கோப்பில் சம்பந்தப்பட்ட செயலர், அமைச்சர்கள் கையெழுத்திட்டு, தலைவர் காமராஜ் அவர்களிடம் ஒப்புதலுக்காகக் காத்திருந்தது. முன்கூட்டியே இதை அறிந்திருந்த எஸ். கஜேந்திரன், பெரியார் அவர்களை அணுகி, நடந்த சம்பவ விவரத்தை விளக்கிக் காப்பாற்றுமாறு கேட்டார். இதற்காகப் பெரியார், தலைவர் காமராசர் இல் லத்திற்குச் சென்றார். கஜேந்திரன் கூறிய உண்மைகளைக் கூறினார். உடனே காமராஜர் அவர்கள், செய்தித்துறையில் அவர் இருப்பதால் தானே அவர்களுக்குச் செய்திகளைக் கொடுக்கிறார்என்ற முடிவிற்கு வந்து அந்தக் கஜேந்திரனை வருவாய்த்துறைக்கு மாற்றிவிட்டார். கஜேந்திரன் பணிநீக்கம், பெரியார் அவர்களால் திரு. காமராஜ் மூலமாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. பெரியார் - காமராஜர் தொடர்பு நெருக்கமாக இருந்ததால், கஜேந்திரனைப் போன்ற பல தமிழர்கள் தங்களது உயர் பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டார்கள். தமிழ்ச்சாதி தன்மானத்தோடு வளர்ந்தது! இத்தகைய உதவிகளை ஆளும் கட்சியின் தலைவரான காமராஜர் அவர்களிடம் பெறவே, திராவிடர் கழகம் காமராஜரை ஆதரித்த காரணங்களிலே ஒன்றாக அமைந்தது. விவசாயம் பெற்ற விந்தைகள்! முதலமைச்சர் காமராஜர் அவர்களது ஆட்சியில், நீர்ப்பாசனத் திட்டங்கள் பல செய்து முடிக்கப்பட்டன. அவற்றுள் சில இவை: கீழ்பவானி, மணிமுத்தாறு, காவிரி முகத்துவாரம், ஆரணியாறு, வைகை நீர்த்தேக்கம், அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, வீடுர் அணைத்தேக்கம், பரம்பிக்குளம், நெய்யாறு போன்ற திட்டங்கள் எல்லாம், தலைவர்காமராஜர் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட நீர்ப் பாசனத் திட்டங்களாகும். திருநெல்வேலி மாவட்டத்தில்கட்டப்பட்ட மணிமுத்தாறு அணையினால், 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனத்திற்குப்