பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவிலே பழுத்த ஆன்ம ஞானியாக விளங்கியவர் உறைந்த மழையின் வெண்மையான வாய்ச்சொற்கள் உள்ளமோ வெண்ணெயைவிட மென்மையானது! இவர்தான் வழக்கறிஞர் எஸ்.சீனிவாச ஐயங்கார்: ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, தான் பெற்றிருந்த அரசு ட்வகேட் ஜெனரல் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்த ஆண்மையாளர் திரு. ஐயங்கார்: வழக்காடும் அவர் "நா விந்தை புரியும் விநோதமானது சாதி, இன, மத, பேதங்களின் வைரி! அவற்றை உடைத் தெறியும் நோக்குடையவர்: நாம் அனைவரும் சரிசமம் என்ற போக்குடையவர்: யார் இந்த ஐயங்கார்? 'நம்மில் உயர்வு தாழ்வு காட்டல் பாவங்கள் ஏற்றத் தாழ்வு என்பவை - எரி நெருப்பும் - கொதி நீருமாகும். இவற்றில் தத்தளிப்பவர்கள் நடுத்தரமக்கள்! அவர்களுக்கு சமதர்ம சோசலிசம் ஒன்றே செந்தேன் இனிப்பை நல்குவது!’ என்று, எஸ்.சீனிவாச ஐயங்கார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பணியாற்றியபோதே தேசியத்தலைவர்களிடையே வாதமிட்டவர் தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் அவர்களும், எஸ். சீனிவாச ஐயங்காரும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களைச் சென்னையிலே கலந்தே பணிபுரிபவர்கள் அரசியலிலே இரட்டையர்கள் சில நேரங்களிலே முரண்பட்டவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் மகாசபை, 1926-ஆம் ஆண்டு கவுகத்தி மாநகரில் எஸ். சீனிவாச ஐயங்கார்தலைமையில் நடந்தது. இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இரண்டாவது தமிழ்ப் பெருமகனார்: தமிழ்நாட்டில் உருவான தீவிரவாதக் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பால கங்காதரத் திலகர் அணியைச் சேர்ந்தவர்!